மதுரை மேயர்... கிடா வெட்ட நடக்கும் ஏற்பாடுகள்

 
ம்m

மதுரை மேயர் பதவிக்காக மூன்று அமைச்சர்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில்,   கட்சியின் சீனியர் ஒருவர் இடையில் புகுந்து தனது ஆதரவாளர் தான் மதுரை மேயர் என்று உறுதியாக சொல்லிக்கொண்டு, அதற்காக பாண்டி கோயிலில் கிடா வெட்டுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருவதால் மதுரை திமுகவில் சலசலப்புகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

ப்

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் அறுபது வருடங்களில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது.   இதில் தனது ஆதரவாளரான சசிகுமார் மனைவி வாசுகியை மேயர் ஆக்கிவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் இருக்கிறாராம் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சரான மூர்த்தி.

 உறவினரான பொம்ம தேவர் மகள் ரோகிணியை மேயர் ஆக்கிவிட வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறாராம் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.  பாமா முருகனுக்கு மேயர் பதவியை வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும் என்று தீவிர முயற்சியில் இருக்கிறாராம் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் தியாகராஜன்.

ப்

மதுரை மேயர் பதவிக்காக மூன்று அமைச்சர்கள் இப்படி முட்டி மோதிக்கொண்டிருக்கும் நிலையில் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொன். முத்துராமலிங்கம்,   தனது  மருமகள் விஜயலட்சுமியை மேயர் ஆக்கியே தீருவேன் என்று சபதம் போட்டுக்கொண்டு சென்னைக்கு வந்து முதல்வர் குடும்பத்தில் உள்ள முக்கியமானவர்கள் எல்லாம் சந்தித்துவிட்டு நம்பிக்கையுடன் மதுரை திரும்பியிருக்கிறாராம்.   என் மருமகள் தான் மதுரை மேயர் என்று அழுத்தமாக கட்சியினரிடையே சொல்லிக்கொண்டு,   அதற்காக பாண்டி கோயிலில் கிடா கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறாராம்.

 இதனால் மதுரை திமுகவில் சலசலப்புகளும் பரபரப்பும் அதிகமாகவே இருக்கிறது.