மகேந்திரன் சபதம்! உருவாகுது ‘பொள்ளாச்சி மாவட்டம்’

 
ம்ஹ்

  கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருந்து வரும் நிலையில் பொள்ளாச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் அதை திமுகவின் கோட்டையாக மாற்றுகிறேன் என்று மக்கள் நீதி மையத்தில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த மகேந்திரன் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி கொடுத்திருக்கிறாராம்.   இதை கவனத்தில் கொண்ட முதல்வர் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறாராம்.

உதயநிதி ஸ்டாலின் கூட தேர்தல் பிரச்சாரத்தின்போது,  பொள்ளாச்சி மக்களின் நீண்டகால கோரிக்கையான தனி மாவட்டம் விரைவில் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.    இதனால் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வரும் என்று பொள்ளாச்சி  மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.   ஆனால் அந்த அறிவிப்பு வரவில்லை.  

ம்க்

 ஆனாலும் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்கும் பணிகள் வருவாய்த் துறையால் இறுதி செய்யப்பட்டு அந்த கோப்பு நிதித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய மாவட்டம் தொடங்கப்பட வேண்டும் என்றால் அதற்கான தொடக்க நிதி நீதித்துறையில் வழங்கப்பட வேண்டும்.  

 நீதித் துறையில் இருந்தும் பொள்ளாச்சி மாவட்டத்திற்கான கோப்பு உறுதி செய்யப்பட்டு முதல்வர் வசம்  இருக்கும் பொது துறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இதை இறுதி செய்து விட்டால் அடுத்த சில நாட்களில் பொள்ளாச்சி தனி மாவட்டம் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற பேச்சு இருக்கிறது.

  பொள்ளாச்சி தனி மாவட்டமாக ஆனால் மாவட்ட பொறுப்பாளராக மகேந்திரன் நியமிக்கப்படலாம் என்று பேச்சு எழுந்திருக்கிறது.   ஆனால் பொள்ளாச்சி எம்பி சண்முக சுந்தரமும் மாவட்ட பொறுப்பாளர் பதவிக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறாராம்.