மின்னல் வேகம் என்பது இனி ஸ்டாலின் வேகம் - நெகிழும் ரோஜா
மின்னல் வேகம் என்பதை இனிமேல் ஸ்டாலின் வேகம் என்று குறிப்பிடலாம் என்று சொல்லி நெகிழ்கிறார் நடிகையும் ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜா.
ஆந்திர மாநிலத்தில் நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார். அப்போது தனது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் முக்கியமானது தமிழக எல்லைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழ் வகுப்புகள் நடத்தப் படுவதால் அம் மாணவர்களுக்கு 10,000 பாட புத்தகங்கள் தேவைப்படுகிறது. அந்த பாடப் புத்தகங்களை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் இடம் இந்த கோரிக்கையை வைத்து வீட்டில் ரோஜா நகரி தொகுதிக்கு சென்று சேர்வதற்குள் புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக முதல்வரின் உத்தரவு அவருக்கு கிடைத்திருக்கிறது. இதனால் நெகிழ்ந்து போன ரோஜா, எங்கள் தொகுதி மற்றும் சித்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி பாடத்திட்டத்திற்கான 10,000 புத்தகங்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விட்டு நகரி வந்து சேருவதற்குள் சித்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு தமிழ் பாட நூல்கள் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உத்தரவு எனது அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது.
மின்னல் வேகம் என்று சொல்வார்கள் ஆனால் அதைவிட வேகமாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு எங்களுக்கு வந்து சேர்ந்து இருப்பதை அடைந்து கண்டு வியந்து போனோம். மின்னல் வேகம் என்பதை இனி ஸ்டாலின் வேகம் என்று குறிப்பிடலாம் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.