தலைவர் பதவி! தலைமையின் முடிவுக்காக காத்திருக்கும் கார்த்தி சிதம்பரம்

 
kர்

பாஜகவின் அரசியல் என்பது உபியின் புல்டோசர் அரசியல்தான் என்று கடுமையாக விமர்சித்தார் கார்த்திக் சிதம்பரம் எம்பி.

 சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்திக் சிதம்பரம்,  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   அப்போது அவரிடம்,  காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் நீங்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் .

ஹ்ஹ்

அதற்கு கார்த்தி சிதம்பரம்,  ‘’தேசிய அளவில்  பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி காங்கிரஸ்தான்.   நான் எப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக வருவேன் என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்’’என்று தெரிவித்தார்.

 தொடர்ந்து பேசிய கார்த்தி சிதம்பரம் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கிறது சாமானிய மக்கள் தான் இந்த சுமையை தாங்க வேண்டும் பிரதமரும் நிதி அமைச்சரும் இருக்கும்வரை விலைவாசி குறைய இந்தியாவுக்கு இப்போது சமத்துவம் மிகப்பெரிய தேவையாக இருக்கிறது என்றார்

கர்நாடக விவகாரம் குறித்து பேசிய அவர், கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன இந்த கோவில்களில் திருவிழாக்கள் நடந்தால் மற்ற மதத்தினர் வியாபாரம் செய்யக்கூடாது என்று தொடர்ந்து சர்ச்சைகள் நடைபெற்று வருகின்றன. பாஜகவின் அரசியல் என்பதே புல்டோசர் அரசியல் என்று விமர்சித்தார்.