கமல் சொன்ன பதில்! மய்ய நிர்வாகிகளுக்கு வந்த மயக்கம்!

 
kl

சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறவில்லை என்றதுமே அக்கட்சியின்  முக்கிய நிர்வாகிகள் பலரும் பறந்துவிட்டனர்.   நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட மக்கள் நீதி மையத்தில் வெற்றி இல்லை என்றதும் காணாமல் போன கமல் கட்சி என்று கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது .  

 ஊரக உள்ளாட்சி தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது மக்கள் விஜய் மக்கள் இயக்கம்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.   சென்னையில் 136 வது  வார்டில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது விஜய் மக்கள் இயக்கம்.   இத்தனைக்கும் விஜய் பிரச்சாரம் செய்யவில்லை.  தனது வேட்பாளர்களை ஆதரித்து ஒரு பேட்டி கூட கொடுக்கவில்லை.  அப்படி இருக்கும்போது விஜய் மக்கள் இயக்கம் இந்த அளவுக்கு தேர்தலுக்கு தேர்தல் முன்னேறி 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து நகர்ந்து கொண்டிருக்கிறது.   ஆனாலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி நாளுக்கு பின்னோக்கி சென்றுகொண்டிருப்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள் அவரது கட்சியினர்.

mm

 கமல்ஹாசனைப் போலவே அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் மக்களோடு மக்களாக கலக்காமல் இருந்ததே தோல்விக்கான காரணம் என்று பொதுவான பேச்சு இருந்தாலும்,  பிரச்சாரத்தின் போது தேர்தல் நிதி கொடுங்கள் என்று மக்களிடம் கமல்ஹாசன் கேட்டதும் கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது என்கிறார்கள் அவரது கட்சியினரே. உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாமல் தடுமாறியபோது நேர்மை அரசியலுக்கு இயன்றதைத் தாருங்களென மக்களிடமே கோரிக்கை விடுத்தோம் என்று கமலும் சொல்கிறார்.  எல்லோரும் கொடுக்கும்போதும் இவர் கேட்டால் மக்கள் என்னதான் செய்வார்கள்.நேர்மையான அரசியலா சார் நடக்குது என்கிறார்கள்.

கட்சியினை மட்டும் கவனித்தால் வெற்றி பெற்றுவிடலாம்.  சினிமா, டிவி நிகழ்ச்சிகளை கவனித்துக்கொண்டே, கட்சியையும் கவனிப்பதால் தான் இரட்டை குதிரையில் சவாரி செய்வதால்தான் பயணம் சரியில்லை.  அதனால் சினிமா,  டிவி நிகழ்ச்சிகளை குறைத்துக்கொண்டு தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.  

nm

 அதற்கு கமல்,   முழுநேரமும் நான் அரசியல் செய்துகொண்டிருந்தால் பட்ட கடனை யார் அடைப்பது? என்று கேட்டிருக்கிறார்.  அதற்கு கட்சி நிர்வாகிகள் மௌனமாக இருந்த போது,   தொடர்ந்து பேசிய கமல்,   மதுரைக்கார அந்த பிரபல பைனான்சியரிடம் மாதந்தோறும் தான்  கட்டும் வட்டி தொகையை சொல்லியிருக்கிறார்.  அதை கேட்ட நிர்வாகிகளுக்கு மயக்கம் வராத குறைதானாம்.   அதற்குமேல் எதுவும் பேச நிர்வாகிகளுக்கு வார்த்தையே வரவில்லையாம்.

இப்போதைக்கு கமலுக்கு இரட்டைக்குதிரை  சவாரிதான் சரி என்று அவர்களும் நினைக்கும்படி ஆகிவிட்டதாம்.