தீர்ப்பு வரும் நாளில் அங்கே இருக்கணும் - சசிகலாவின் பயண திட்டம்

 
sஅ

 பங்குனி அமாவாசையான இன்று கொங்கு மண்டலத்திற்கு சென்று தனது ஆதரவாளர்களை சந்திக்க திட்டமிட்டு இருந்த சசிகலா பயணத்திட்டத்தை திடீரென்று ரத்து செய்திருக்கிறார்.   அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி இருப்பதால் தீர்ப்பு வரும் நாளில் ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம்,  ஆதரவாளர்களை சந்திக்கலாம் என்று அவரது பயணத்தை மாற்றி அமைத்திருப்பதாக  தகவல்.

 அதிமுக பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து சென்னை சிவில் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகலாம் என்ற தகவல் பரவி வருகிறது.   இதனால்  சசிகலா இன்றைய பயணத்தை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.   தீர்ப்பு வரும் நாளில் ஆலயங்களுக்குச் செல்லும் வகையில் தனது பயணத்திட்டத்தை அவர் மாற்றியமைத்துள்ளார்.  

சச்டி

 ஏப்ரல் 8ஆம் தேதி திருச்சியில் தங்க இருக்கிறார்.   மறுநாள் நாமக்கல் ஆஞ்சநேயர்,  திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்,  இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய இருக்கிறார்.   அன்றைய தினம் இரவு சேலம் மாவட்டத்தில் உள்ள ஓட்டலில் ஆதரவாளர்களை சந்திக்கிறார்.   ஏப்ரல் 10ஆம் தேதி அன்று காலையில் மேச்சேரி பத்ரகாளியம்மன்,  அந்தியூர் பத்ரகாளியம்மன்,  கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர்,  தேன்கனிக்கோட்டை காலபைரவர் கோவில்களில் தரிசனம் செய்ய இருக்கிறார்.

 பின்னர் ஈரோடு மாவட்டம் பண்ணாரி  மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திருப்பூர் வழியாக கோவை செல்லும் சசிகலா ஈச்சனேரி விநாயகர் கோவிலிலும் தரிசனம் செய்து கொங்குமண்டல பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறார் என்றும் தகவல்.

 அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது .   இருதரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.    தீர்ப்பு எட்டும் நிலையில் உள்ளதால் சசிகலா தனது இன்றைய பயணத்திட்டத்தை மாற்றி அமைத்திருக்கிறார் என்று தகவல்.