ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த ஓபிஎஸ் -இபிஎஸ்

 
j

கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே,  இழுபறியில் இருந்து வரும்போதே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கூட்டணிக் கட்சியினரை பதற வைத்து அதிரடி காட்டுவது ஜெயலலிதாவின் வழக்கம்.   அந்த பாணியைத்தான் தற்போது  பாஜகவிடம் காட்டியிருக்கிறார்கள் ஓ. பன்னீர்செல்வமும்,  எடப்பாடி பழனிச்சாமியும்.

 தேமுதிக,  மதிமுக,  கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த காலங்களில் அதிமுகவுடன் அதிக தொகுதிகளை கேட்டு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்த நிலையில் தடாலடியாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து கூட்டணிக் கட்சியினரை பதற வைத்தவர் ஜெயலலிதா.   அதன் பின்னர் வேறு வழியின்றி கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டு கூட்டணி ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். 

e

  ஜெயலலிதாவின் அதே பாணியை கையில் எடுக்கக்கூடிய தடாலடி நபர்கள் இல்லை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும்.  ஆனாலும் அவர்களையே அந்த பாணியை கையில் எடுக்க வைத்துவிட்டது  பாஜவின் செயல்.  அதிமுக எம்எல்ஏக்களை படுகேவலமாக பாஜகவின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்த ஓ. பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி இருவரும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அதை காட்டியிருக்கிறார்கள்.

 இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடந்ததில் பாஜகவின் இழுத்த இழுப்புக்கெல்லாம் கொஞ்சம்கூட போகாமல் இருந்திருக்கிறார்கள் பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி.   எப்படியும் அதிமுக நம்ம வழிக்கு வந்து விடும் என்று பாஜக எண்ணியிருந்த நேரத்தில்தான்,   முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும்.  

an

 ஜெயலலிதாவின் பாணியை இவர்கள் இருவரும் எடுப்பார்கள் என்று கொஞ்சம் கூட நினைத்திராத பாஜக வேறுவழியின்றி கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொள்ள வேண்டிய நிலை. ஆனால் அதற்கு மனமில்லாமல் தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்டது.  இதுதான் சமயமென்று அடுத்த நிமிஷமே இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்து தடாலடி காட்டியிருக்கிறார்கள் ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி.

 நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த தடாலடி தொடருமோ என்ற பதைபதைப்பில் இருக்கிறது பாஜக.