திமுக ஆட்சி மூன்று வருசம்தானா? நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலா?

 
cm st

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஆதரித்து பிரச்சாரம் செய்தார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.   

 கூட்டத்தில் அவர் பேசியபோது,    பகட்டான விளம்பர அரசியல் செய்து, பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவினரின் முகத்திரையை கிழிக்க நல்ல வாய்ப்பு தான் இந்த தேர்தல்.   நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திமுகவினரின் முகத்திரையை கிழிக்க வேண்டும்  என்றார்.

op

மேலும்,  கடந்த முறை உள்ளாட்சியில் ஒரு லட்சம் பேருக்கும்,  கூட்டுறவில் 2 லட்சம் பேருக்கும் பதவி வாங்கிக் கொடுத்தவர் ஜெயலலிதா.   நாங்கள் ஜெயலலிதா பெயரைச் சொல்லி வெற்றி பெற்றோம்.   இந்த தேர்தல் தொண்டர்களின் தேர்தல்.    அதிமுக தொண்டர்கள் இயக்கம் .   தலைவர்கள் பிரிந்து இருந்தாலும் தொண்டர்கள் ஒன்றாக நின்று  காக்கும் இயக்கம் அதிமுக என்றார்.

 தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம்,    இந்த தேர்தல் நூற்றுக்கு நூறு அதிமுக வெற்றி பெறும் தேர்தல் .   இதன் மூலமாக திமுகவிற்கு மரண அடி கொடுக்க வேண்டும் என்றார். மேலும்,    2 ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது.   அப்போது நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டமன்றத் தேர்தலும் நடக்கும் . அதற்கான அச்சாரமாக தான் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இருக்கும் என்றார் அதிரடியாக.

dv

 மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ,   திருச்சி மாநகர் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களை அறிவித்து அறிமுகப்படுத்தி பேசியபின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,  நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனாலும், இந்த மத்திய அரசை நம்ப முடியாது. இவர்கள் என்ன வேண்டுமானலும் செய்வார்கள் என்று சொல்லி இருக்கிறார்.  அவர் மேலும் இதுகுறித்து,   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை மூன்றாண்டுகள் மட்டுமே அனுமதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றார்.