மாமனார் மீது ஆணை! இது கச்சேரியா? பதவியேற்பில் சுவாரஷ்யங்கள்

 
ri

இது கச்சேரியா? என்று எம்.ஜி.ஆர். பாடலை பாடி பதவியேற்றதால் சலசலப்பு எழுந்தது.

 நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.  . மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பதவி பிரமாணம் நிகழ்ச்சியின்போது பல சுவாரசியங்கள் அரங்கேறின. 

 நான் கோட்சேவின் ஆதரவாளர் என்று சொல்லி பிரச்சாரம் செய்து வெற்றி பெற்ற 134 ஆவது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் ஆனந்தன்,   ’’நான் தினமும் வணங்கும் தில்லை அம்பலத்தான்,  அரங்கனுக்கும் கோடி நமஸ்காரம் . தெய்வ அனுகிரகத்தால் வெற்றி பெற்றேன்’’என்று சொல்லி பதவி ஏற்றுக் கொண்டார். 

go

 193 வது வார்டு அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி,   ’’பதவி வரும்போது பணிவு வரவேண்டும்’’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடி பதவியேற்றார். அப்போது திமுக உறுப்பினர்கள்,   ’’இது என்ன கச்சேரி நிகழ்ச்சியா?’’ என்று கேள்வி எழுப்பியதால் சலசலப்பு எழுந்தது.   அதற்கு கோவிந்தசாமி,   ’’நீங்கள் பேசியதை நான் பாடினேன் அவ்வளவுதான்’’ என்று பதிலளித்தார்.  இதனால் மேலும் சலசலப்பு இருந்தது .

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திலகர் 92 வது வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்று இன்று பதவியேற்றபோது,   ’’கை கைவிட்டது.  ஆனால் மக்கள் கைவிடாமல் என்னை தேர்ந்தெடுத்தார்கள்.  வாக்களித்த மக்கள் சகோதர சகோதரிகளுக்கு நன்றி’’தெரிவித்துக்கொண்டார்.

98வது வார்டில் வென்ற சிபிஎம் உறுப்பினர் பிரியதர்ஷினி இருபத்தி ஒரு வயதே ஆன இளம் மாமன்ற உறுப்பினர்.   இவர்,  ‘’ சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நாமம் வாழ்க ’’என்று சொல்லி பதவி ஏற்றுக் கொண்டார்.   59 ஆவது வார்டு உறுப்பினர் சரஸ்வதி கண் கலங்கிய படியே பதவியேற்றார்.      111 வது வார்டு திமுக உறுப்பினர் நந்தினி ,   ‘’மாமனார் மீது ஆணை’’ என்று சொல்லி பதவி ஏற்றுக் கொண்டார்.