கடவுள் என் முன்னால் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்டால்..ராமதாஸ் சொன்ன பதில்

 
r

’ஒரு சொட்டு’ என்கிற தலைப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ்,   கடவுள் என் முன்னால் தோன்றி,  ”உனக்கு  ஓர் வரம் தருகிறேன். என்ன வரம் வேண்டும் கேள்”என்று கேட்டால், ‘தமிழ்நாட்டில் ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு சொட்டு வான்மழை நீர் வீணாக கடலில் கலக்காத நிலை உருவாக வேண்டும் ’என்று கேட்பேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

rss

இதற்கு பாமகவினும் நெட்டிசன்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   தமிழ்நாட்டுகாந்தி  தாங்கள் கூறுவது உண்மைதான். ஆனால் எப்போது இவர்கள் திருந்துவார்கள். மதுவால் உலகில் தினந்தோறும் இறப்பு கற்பழிப்பு கொலை கொள்ளை திருட்டு மதுவால் சீரழிந்து கொண்டிருக்கிறது.

அணை கட்ட வேண்டும் தடுப்பணை கட்ட வேண்டும் குளங்கள் ஏரிகள் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரப்ப வேண்டும் தமிழ்நாட்டுகாந்தி மருத்துவர் அய்யா தாங்கள் கூறியது.  ஆனால் இவர்கள் எப்போது அதை செய்வார்கள் தெரியுமா? பஞ்சம் தலைவிரித்தாடும் போது.  ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காமல் அதிக பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை அலையும் போது தான் அதனுடைய மகத்துவம் தெரியும்.  

தண்ணீர் இல்லை என்று கண்ணீரை வரவழைக்கும் போது ஐயா தாங்கள் கூறியது நினைவுக்கு வரும் அவர்களுக்கு மதுவினால் தன்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் இறப்பு அந்த சூழ்நிலையில் தான் அவனுக்கு மதுவின் கொடூரத்தை உணர்வான். இது காலத்தால் நடைபெறும்.  ஆனால் நடைபெறாமல் இருக்க தாங்கள் கூறுவது படி நடந்தால் நிச்சயம் நல்லதே நடக்கும் தீர்க்கதரிசியான தங்களுக்குத் தெரியும் என்றும், 

neer

இயற்கை காதலர் மருத்துவர் அய்யா,  உங்களின் உணர்வின் ஆழத்தை உணர்கிறேன்... நடக்கும் !!! இம்மண்ணில் கடவுள் சரியாக, உணர்வுரீதியாக கொள்கை கொண்டால் எல்லாம் சாத்தியம் அய்யா !!! கடவுள் பொருள் மக்கள் என்றும் சொல்லி வருகிறார்கள்.

அய்யா உங்களின் மனதில் உதித்த நல்ல எண்ணங்களின், திட்டங்களே, இன்றைய அரசின் திட்டங்கள். இப்போது கடவுள் உங்களிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், நீங்கள் சொல்லும் ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம்,ஒரு சொட்டு கூட வான்மழைநீர் வீணாக கடலில் கலக்காத நிலை உருவாகிட வேண்டும் என்று கேட்பது, நாம் (பாமக)ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சாத்தியம். மற்றவர்களால் இதை நிறைவேற்ற முடியாது.  நீங்கள் நினைத்தது எல்லாம் நடந்திருக்கும் போது, இது நடக்காதா என்ன? இதுவும் கடந்து போகும்.  2026ல் நம் ஆட்சிதான். அப்போது நீங்கள் நினைத்தது எல்லாமே நடக்கும் என்று பதில் சொல்லி வருகிறார்கள்.