ஓபிஎஸ் தம்பி கொடுத்த ஐடியா! உற்சாகத்தில் சசிகலா!

 
sooo

 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் எப்படி சசிகலாவை அதிமுகவிற்குள்  கொண்டுவர வேண்டும் என்கிற குரல்கள்  கட்சியினரிடையே எழுந்தனவோ, அதேபோல் ஊராட்சி மன்ற தேர்தல் தோல்விக்குப் பின்னரும் சசிகலா தினகரனை கட்சிக்குள் கொண்டு வரவேண்டுமென்று நிர்வாகிகள் குரலெழுப்பி வருகின்றனர். முன்பு போலவே தற்போதும்  சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிர்வாகிகள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு வருகின்றனர்.  அந்த வகையில் பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டு இருக்கிறார்.

 வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் எப்படியும் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகிவிட வேண்டும் என்று தீவிரமாக இந்தமுறை களமிறங்கியிருக்கிறார் சசிகலா. தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலா, தினகரன் இருவரையும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பது சசிகலாவுக்கு புது தெம்பை  கொடுத்திருக்கிறது.

oo

 இதையடுத்து அவர் தென்மாவட்ட கோவில்களுக்கு சென்று சிறப்பு யாகம், சிறப்பு பூஜைகள் செய்ய முடிவெடுத்து அதற்காக தூத்துக்குடிக்கு சென்று  தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அவரை,  ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ. ராஜா சந்தித்துள்ளார்.

 நாலாம் தேதி மாலை ஐந்து முப்பது மணிக்கு சசிகலாவை சந்தித்தபோது,  ஓரிரு நிமிடங்கள் மட்டுமே ராஜாவிடம் பேசிய சசிகலா,  கோயிலுக்குச் செல்ல வேண்டும். வந்து விடுகிறேன் பொறுமையாக பேசலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.  இரவு 9 .30 மணிக்கு சசிகலா திரும்ப வரும் வரை காத்திருந்து இருக்கிறார் ராஜா. அவர் வந்த பின்னர் 20 நிமிடங்கள் இருவரும் பேசி இருக்கிறார்கள்.

 அதிமுகவில் இனி பிரிவு வரக்கூடாது என்று நிதானமாக நீங்கள் செயல்பட்டு வருகிறீர்கள் .   ஆனால் எடப்பாடி விடாப்பிடியாக இருக்கிறார் .  அவரை சுற்றி இருக்கும் சமூகத்தை மீறி அவர் செயல்பட மறுக்கிறார்.   அதனால் இது சரிப்பட்டு வராது.    எடப்பாடியையும் சம்மதிக்க வைத்து ஒற்றுமையாக செயல்படலாம் என்று நீங்கள் நினைப்பது சரிப்பட்டு வராது.   அதனால் நீங்கள் அதிரடியாக களத்தில் இறங்குங்கள்.   தலைமைக் கழகத்திற்கு வந்துவிடுங்கள்.   உங்களை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.  

 எப்படியும் கட்சி இரண்டாக பிரிவது நிச்சயம்.    எடப்பாடி ஒரு அணியாக தனித்தனியாக பிரிந்து சென்று விடுவார் ஆனால் கூடிய சீக்கிரத்தில் அதையும் சரி பண்ணிவிடலாம் எல்லாவற்றையும் சுமூகமாக ஆனால் எடப்பாடியும் சம்மதித்து எல்லாம் சுமூகமாக நடக்க வேண்டும் என்று நினைத்தால் காலம்தான் விரயமாகும். அதனால் நீங்கள் உடனடியாக தலைமைக் கழகத்திற்கு வாங்க. உங்களை வரவேற்க நாங்கள் தயாராக  இருக்கின்றோம் என்று சொல்லி இருக்கிறார் ராஜா.

 அதற்கு சசிகலா,   என்னால அதிமுகவுக்கு எந்த பாகமும் வந்து விடக்கூடாது என்றுதான் இத்தனை காலமும் பொறுமையாக இருந்தேன்.  அதற்காக நாடாளுமன்றத் தேர்தலையும் இப்படியே விட்டுவிட முடியாது.  அதனால் நீங்கள் சொல்கின்ற யோசனையையும் நான் எடுத்துக்கொண்டு ஒரு முடிவு எடுக்கிறேன் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். 

 சசிகலாவை சந்தித்த ராஜாவை மட்டுமல்லாது அவருடன் சென்ற தேனி மாவட்ட நிர்வாகிகளும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.