மய்யத்திலிருந்து நான் விலகவில்லை -ஆனால்,... பொன்னுசாமி

 
[o

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பொன்னுசாமி விலகிவிட்டதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்,  தான் மய்யத்தில் இருந்து விலகவில்லை என்று பொன்னுச்சாமி விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால், இரண்டு பொறுப்புகளி இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

  கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறிவிட்டனர்.  தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்விக்குப் பின்னர் திருப்பூர் மாநகராட்சியில் 36 வது வார்டில் போட்டியிட்டு வெறும் 44 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்த மணி தேர்தலுக்காக வழங்கிய 50 ஆயிரம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது மக்கள் நீதி மையம் கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொன்

 இதனால் கட்சியினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆன்லைன் வாயிலாக கமலஹாசன் பேசி வருகிறார்.   தோல்விக்கான காரணங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி கட்சிகளுடன் ஆலோசித்து வருகிறார்.   இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பலர் ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.    மகேந்திரன் உள்ளிட்டோர் இப்படித்தான் ராஜினாமா கடிதம் கொடுத்து அது ஏற்கப்பட்டது. 

 இந்த நிலையில் மீண்டும் ராஜினாமா கடிதம் என்ற பரபரப்பு நிலவியது.  மாநில செயலாளரும் தொழிற்சங்க பேரவை தலைவருமான பொன்னுசாமி கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டவர்.   தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் கட்சியும் அதை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.   ஆனால் இந்த செய்திகளில் உண்மை இல்லை என்று மறுத்திருக்கிறார் பொன்னுச்சாமி தனக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு பொறுப்புகளையும் கவனிக்க இயலாத காரணத்தால் அணி மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தான் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கோரிக்கை விடுத்து இருந்தேன்.  ஆனால் நான் கட்சியை விட்டு விலகி விட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் உண்மையில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ன்னு

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி அன்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்த அறிவிப்பில்,   ’’தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவரான பொன்னுசாமி , தமிழக பால் முகவர்களின் உரிமை சார் போராட்டங்களை முன்னெடுத்து அவர்களின் நலம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு உரிமைக் குரலாக ஒலித்து வந்தார்.    அதே வேளையில் நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீது பெரும் நம்பிக்கையும் ஆதரவும் கொண்டு தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் எல்லாம் நமக்கு ஆதரவாகவும் சார்பாகவும் அறிக்கைகள் மூலமும் பிரச்சாரங்கள் மூலமும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.  அதன் அடுத்த கட்டமாக தன்னை நமது கட்சியில் எனது முன்னிலையில் இணைத்துக் கொண்டுள்ளார் பொன்னுச்சாமி.   அவர்களின் தொடர் செயற்பாட்டையும் நமது கட்சிக்கு ஆதரவான அவரின் நிலைப்பாட்டினை கவனத்தில் கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் நல அணியின் மாநிலச் செயலாளராக நியமித்து பொன்னுச்சாமி அவர்களின் அவர்களுக்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கி பணியாற்றிட வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.