என் வாயை மூட முடியாது - திமுகவுக்கு ஜெயக்குமார் பதிலடி

 
j

நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்களில் திங்கள் ,புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை படி நேற்றைய முன்தினம் கையெழுத்திட்டார்.   இன்றைக்கு கையெழுத்திட்டுள்ளார்.

 இதற்காக அவர் திருச்சியில் தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.   டெல்டா பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசி வருகின்றார்கள்.   இந்த நிலையில் திருச்சியில் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.   அவருடன் முன்னாள் அமைச்சர்களும் உடன் இருந்தனர்.   அப்போது திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் ரெய்டு குறித்த கேள்விக்கு,

23

 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் , மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாமல் ,  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளைப் போட்டு பணம், நகை, சல்லி காசு கூட கைப்பற்றாமல் ,  ஆனால் அதை கைப்பற்றியதாக சொல்வது பொய் என்றார்.

 ஜாமீனில் வெளிவந்த ஜெயக்குமார் தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பதாக திமுக ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு,   நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறேன்.   மற்றபடி எனக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.   ஜெயக்குமாரின் வாயை மூட முடியாது.   ஒன்றரை கோடி தொண்டர்கள் வாயை மூடவே முடியாது என்றார்.

 முதல்வர் ஸ்டாலின் இந்தியாவின் சிறந்த முதல்வர் என்று சொல்லுகிறார்களே என்ற கேள்விக்கு,   இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக் என்று சொல்லிவிட்டு கிண்டலாகச் சிரித்தார்.