’’சசிகலாவுக்கு கௌரவமான பதவி! ஆனா, முடிவெடுக்கும் அதிகாரம் நமக்கு தான் இருக்கணும்’’ - எடப்பாடி பழனிச்சாமி

 
e

 சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் தற்போது மாற்றம் தெரிகிறது என்கிறது அக்கட்சி வட்டாரம் .

சென்னையிலிருந்து சேலத்திற்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி தனக்கு நெருக்கமான சிலருடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.   அந்த ஆலோசனையில் ஆத்தூர் இளங்கோவனும் பங்கேற்றிருக்கிறார்.   எடப்பாடிக்கு மிக நெருக்கமான ஆத்தூர் இளங்கோவன் சமீபத்தில் சசிகலாவுடன் தொடர்பில் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. நடராஜன் நினைவு தினத்தை முன்னிட்டு சசிகலா தஞ்சாவூர் சென்றிருந்தபோது கூட அவருடன் செல்போனில் பேசியதாகவும் கட்சி வட்டாரத்தில் தகவல் இருந்தது.

mu

 இந்த நிலையில் ஆதரவாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,   சசிகலா அதிமுகவிற்கு வந்தாலும்கூட அவருக்கு முழுமையான அதிகாரம் இருக்கக் கூடாது. ஒரு கௌரவமான பதவி வேண்டுமானால் இருக்கலாம்.  இப்போது இருக்கும் இந்த செட்டப்பிலேயே தொடரவேண்டும்.   முடிவெடுக்கும் அதிகாரம் எல்லாம் நமக்கு தான் இருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் .  

ஆனால் இன்றைய தினம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது,  சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக்கூடாது என்று மாவட்ட அளவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.   சசிகலாவை அதிமுகவில் சேர்க்க எந்த வாய்ப்பும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

 ஆதரவாளர்களிடம் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவை கட்சிக்குள் வந்தாலும் என்று அவர் சொன்னபோது சசிகலா  அதிமுகவிற்கு வர ஆதரவு தெரிவித்து விட்டார் என்று கட்சியினர் பேசிக் கொண்டிருந்த நிலையில்,  இன்று திடீரென்று செய்தியாளர்களிடம் பேசியபோது மீண்டும் பழையபடியே சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.