குணாவின் கூட்டாளிகளும் சிக்கினர் - மாஜிக்கள் கலக்கம்

 
gஉ

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள்,  தொழிலதிபர்களின் பெரும் புகார்களுக்கு பின்னர் தீவிரமாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி குணா படப்பை குணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   இந்தநிலையில் படைப்பை உணவின் முக்கிய கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்களும்,  முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக பிரபலங்களும் கலக்கத்தில் உள்ளதாக தகவல்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா.   43 வயதான இவர் மீது எட்டு கொலைகள்,  9 கொலை முயற்சிகள்,  உள்ளிட்ட 48 வழக்குகளில் சம்பந்தப்பட்டு இரண்டு முறை தடுப்புக்காவல் குண்டாஸ் நடவடிக்கை அவர் மீது எடுக்கப்பட்டிருக்கிறது.  

பொ

 இந்த நிலையில் காஞ்சிபுரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரவுடிகளின் கொட்டத்தை அடக்க டிஎஸ்பி வெள்ளத்துரை நியமிக்கப்பட்டிருந்தார்.  அவர் செய்த ஆபரேஷன் மூலம் தலைமறைவு குற்றவாளியாக இருந்த பிரபல ரவுடி படப்பை குணா குணாவுக்கு உதவியதாக 30 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.   படப்பை குணாவின் சொத்துகள் முடக்கப்பட்டு,  குணாவின் மனைவி உள்ளிட்ட பலரை போலீசார் தங்கள் வளையத்திற்குள் வைத்து விசாரணை நடத்தினர்.   இதில் குணாவின் நெருங்கிய நண்பர்கள் போந்தூர் சிவா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.

 குணாவின் முக்கிய கூட்டாளிகளான போந்தூர் சிவா,  மாம்பாக்கம் பிரபு உள்ளிட்டோரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தநிலையில் ரவுடி குணா போந்தூர் சேட்டுவுடன் தலைமறைவாகிவிட்டார்.   மாம்பாக்கம் பிரபுவை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்துள்ளனர்.  இவர் மூலம்தான் படப்பை குணா தொழில் நிறுவனங்களில் நுழைந்து மிரட்டி அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு வந்ததாக தெரிகிறது.

ப்ர்

 கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சாதாரண இருசக்கர வாகனத்தில் சென்று வந்த மாம்பாக்கம் பிரபு தற்போது சொகுசு காரில் வலம் வந்திருக்கிறார்.   குணாவின் உதவியோடு ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் மேன் பவர் சப்ளை , நிறுவனங்களுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் சப்ளை,   கட்டப்பஞ்சாயத்து , அடிதடி தொழில்கள் செய்து வந்திருக்கிறார்.

 தலைமறைவாக இருந்த படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 25ஆம் தேதி சரணடைந்தார்.  இதையடுத்து அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார். 

 இந்த நிலையில் பிரபல ரவுடி படப்பை குணாவின் நெருங்கிய கூட்டாளிகள் மாம்பாக்கம் பிரபு  கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரிடம் இருந்த விலை உயர்ந்த பென்ஸ் கார் உட்பட நான்கு சொகுசு கார்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.    குணாவின் கூட்டாளிகள் காவல்துறையால் தேடப்பட்டு வந்த முக்கிய புள்ளியான போந்தூர் சேட்டு போலீசாரை ஏமாற்றி சென்னையில் தலைமறைவாக இருந்துகொண்டு மருத்துவ சிகிச்சை எடுப்பதாக நாடகமாடி வந்த அவரையும் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

 படப்பை குணா மட்டுமல்லாது அவருடன் தொடர்பு இருந்த முக்கிய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டு இருப்பதால் கடந்த அதிமுக ஆட்சியில் ரவுடி குணா இந்த அளவுக்கு செல்வாக்கு பெற உதவி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்களும் ,  முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக பிரபலங்களும் கலக்கத்தில் உள்ளதாக தகவல்.