கேரளா ஆளுநர்- எச்.ராஜா முன்னிலை

 
h

பாஜகவின் தேசியச் செயலாளரும்,  தமிழக பாஜகவின் மூத்த தலைவருமான எச். ராஜா(64),   கேரள ஆளுநராக நியமிக்கப்பட இருக்கிறார் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.   கேரளாவின் தற்போதைய ஆளுநர் ஆரிப் முகமது கான் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட  இருக்கும் நிலையில் கேரளாவின் அடுத்த ஆளுநர் பட்டியலில் எச். ராஜா முன்னிலையில் இருக்கிறாராம்.

 தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.   பின்னர் அவர் புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் ஆகவும் நியமிக்கப்பட்டார்.   தமிழக பாஜகவின் மூத்த தலைவராக இருந்த இல.கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

hr

 தமிழக பாஜகவின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடந்த முறை மத்திய இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.  தமிழிசை சவுந்தரராஜனுக்குப் பின்னர் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 இந்த நிலையில்  கேரள மாநிலத்தின் ஆளுநர் ஆரிப் முகமது கான் வேறு மாநிலத்துக்கு மாற்ற இருப்பதாக பாஜக தலைமை முடிவு எடுத்திருக்கிறது.  இதை அடுத்து கேரள மாநிலத்திற்கு ஆளுநராக யாரை நியமிக்கலாம் என்று பாஜக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது.   இதற்காக தமிழக பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன் எச். ராஜா உள்ளிட்டோரை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறது. 

 தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.  இதனால் கேரள மாநிலத்திற்கு தமிழிசையை மாற்றலாம் என்றும் பாஜக தலைமை யோசிக்கிறதாம்.  ஆனாலும்,  கேரள மாநிலத்தின் அடுத்த ஆளுநர் பட்டியலில் எச்.ராஜா முன்னிலையில் இருப்பதாக தகவல்.