மாஜி அமைச்சரின் உறவினர் எனச்சொல்லி 4 பேரிடம் ஆட்டைய போட்டவர் கைது

 
mo

முன்னாள் அதிமுக கல்வித்துறை அமைச்சரின் உறவினர் என்று சொல்லி 11.75 லட்சம் ஏமாற்றிய மில் சூப்பர்வைசர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கரூர் மாவட்டத்தில் கடவூர் காளைபட்டி அடுத்த சின்னாண்டிபட்டி.   இப்பகுதியை சேர்ந்தவர் தாமஸ் ஆல்பர்.    இவர் கூடலூரில் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார்.   

 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நல்ல கவுண்டம்பாளையத்தினைச் சேர்ந்தவர் அனந்த குமார்.    இவரிடம் தாமஸ் ஆல்பர்ட்டுக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது.   ஆனந்தகுமார் ஸ்பின்னிங் மில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்திருக்கிறார்.

j

 2018-ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் தான் அதிமுகவின் கல்வித்துறை அமைச்சரின் உறவினர்கள் என்று அறிமுகமாகியிருக்கிறார்.   அரசு வேலை வாங்கித் தரமுடியும் என்றும்  உறுதியாக சொல்லியிருக்கிறார் ஆனந்தகுமார்.

இதை  நம்பி அவரிடம் 7 லட்சத்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்து இருக்கிறார் தாமஸ் ஆல்பர்ட்.    இதேபோல் ராஜா என்பவர் ஒரு லட்சமும்,  சுரேஷ் என்பவர் ஒரு லட்சத்து பத்தாயிரம்,  மருதமுத்து என்பவர் 2 லட்சத்து 55 ஆயிரமும் ஆனந்தகுமார் இடம் கொடுத்திருக்கிறார்கள்.   மொத்தம் நாலு பேரிடம் 11 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டிருக்கிறார் ஆனந்தகுமார்.

ஆனால்  இவர் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். அதன் பின்னர்தான் இவர் அமைச்சரின் உறவினர் இல்லை என்பது தெரியவந்து இருக்கிறது.  இதை அடுத்து கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர் கொடுக்க மறுத்து வந்திருக்கிறார்.   தற்போது கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்ததை  அடுத்து புகாரின் பேரில் கரூர் மாவட்ட போலீஸ் ஆனந்த குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.