தமிழக பாஜகவில் பரபரப்பு! முக்கிய தலைவர்கள் டெல்லி பறந்தனர்

 
va

 தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.   இதையடுத்து தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள முக்கிய தலைவர்கள் பலரும் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர் என்று தகவல்.   இதனால் தமிழக பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது .   இதை  அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜகவில் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன.  மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட இருக்கிறார்கல்.  இது குறித்து அண்மையில் மாநில மத்திய குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது.  இதையடுத்து விரைவில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வர இருக்கின்றன.

ann

 இந்தநிலையில் தங்களின் பதவி நிலைக்க வேண்டும் என்று பலரும் டெல்லியில் முகாமிட்டு தலைமையிடம் வலியுறுத்தி வருவதாக தகவல்.    முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசியுள்ளார்.  ஆனால் இந்த சந்திப்பு குறித்து தனது முகநூல் பக்கத்தில் பொன்ராதாகிருஷ்ணன்,  ‘’பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து சிறிது நேரம் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தனது பல்வேறு அலுவல்களுக்கு மத்தியில்  இச்சந்திப்பிற்கு வாய்ப்பளித்த பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

 பாஜகவின் மாநில துணைத் தலைவர் சீனிவாசன் டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.  ஆனால் அவர் மதுரை சித்திரை திருவிழாவில் நிர்மலா சீதாராமன் பங்கேற்க அழைப்பு விடுத்ததாக  தெரிவித்திருக்கிறார்.    பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்.    இவர்கள் எல்லாரும் தங்களின் டெல்லி பயணம் குறித்து வேறு வேறு காரணங்கள் சொன்னாலும்,  தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றம் குறித்த  விவகாரத்தை முன்வைத்து தான் டெல்லியில் முகாமிட்டுள்ளனர் என்று தகவல்.