ஆதாரம் கிடைத்துவிட்டது; அழகிரி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக

 
b

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜகவுக்கு பரவலான வெற்றி கிடைத்திருக்கிறது.   21 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை மாநகராட்சியில் மீண்டும் தடம் பதித்திருக்கிறது.   இதையடுத்து தமிழகத்தில் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது என்ற பேச்சு எழுந்தது.

 மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சொல்லி வந்தார்.  இதனால், ‘’இது அடிப்படை ஆதாரமற்ற கருத்து’’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடுப்பாகி பேசினார்.  அவர் மேலும்,   ‘’சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 16 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை விட பெரிய கட்சி என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்கமுடியாதது.  காங்கிரஸ் கட்சி உறுதியாக நிதானமாக கொள்கை ரீதியாக படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கொள்கை இல்லாதவர்கள், வன்முறையில் நாட்டம் உள்ளவர்கள், வெறுப்பு பேச்சு பேசக்கூடியவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். ’’ என்றார். 

tm

தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சி காங்கிரஸ்தான், பாஜக அல்ல;  2024 மக்களவை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபிக்கட்டும்.  தனித்து போட்டியிடுமா? என்பதை  அண்ணாமலை தெளிவாகக் கூற வேண்டும் என்றும் அழகிரி  தெரிவித்தார். மேலும்,  பாஜக வால் கனவில் தான் குதிரை ஓட்ட முடியும்  என்றும் கே.எஸ்.அழகிரி விமர்சித்தார். 

இதற்கு   தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ’’கனவில் கூட கழுதையையும், பன்றியையும் மேய்க்க முடியாதவர்கள் குதிரை ஓட்டுவது  குறித்து விமர்சனம் செய்வதா?’’என்ற கடுமையாக சாடியிருந்தார்.

பாஜக தான் மூன்றாவது பெரிய கட்சி என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அடிப்படை ஆதாரத்தை ஏற்று கொண்டு, பாஜக குறித்தும்,  அண்ணாமலை  குறித்தும் அவதூறு பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மன்னிப்பு கேட்க வேண்டும்  என்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
 
நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது என்பதற்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விபரப்பட்டியல்:

b

திமுகவில் 1121 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் 948 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  இவர்கள் மொத்தம் 3295187 வாக்குகள் பெற்றுள்ளனர்.    9462 தபால் ஓட்டுக்களையும் சேர்த்து 3557262 பெற்றுள்ளனர். இதன் மூலம் 43.59 வாக்கு சதவிகிதம் பெற்று திமுக முதலிடத்தில் இருக்கிறது.

1363 வேட்பாளர்களுடன் தனித்து களமிறங்கியதில் 164 அதிமுக வேட்பாளர்கள் மட்டுமே  வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் 383971 வாக்குகள் பெற்றுள்ளனர். 2444 தபால் ஓட்டுக்களையும் சேர்த்து 1961005 பெற்றுள்ளனர்.  24 சதவிகித வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறது அதிமுக.

1134 வேட்பாளர்களுடன் தனித்து களமிறங்கிய பாஜக, 22    வெற்றி வேட்பாளர்களை பெற்றது.  இந்த வேட்பாளர்கள் 36807 பெற்றிருந்த நிலையில்,    1195 தபால் வாக்குகளையும் சேர்த்து 585826 வாக்குகளை பெற்றிருக்கிறது பாஜக.  7.17 வாக்கு சதவிகிதம் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கிறது பாஜக.

122 வேட்பாளர்களுடன் களமிறங்கிய காங்கிரசுக்கு 73வெற்றி பேட்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்.  இவர்கள் 199258 வாக்குகளும், 819 தபால் வாக்குகளும் பெற்று மொத்தமாக257881 வாக்குகள்  பெற்றுள்ளன. 3.16 வாக்கு சதவிகிதம் பெற்று நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் 1114 வேட்பாளர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் கூட, 205392    வாக்குகள் பெற்று 2.51 வாக்கு சதவிகிதத்துடன் ஐந்தாம் இடத்தினை பிடித்திருக்கிறது.

na

671 வேட்பாளர்களுடன் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் கூட, 14.8334 வாக்குகள் பெற்று 1.82 வாக்கு சதவிகிதத்தில் 6வது இடத்தினை பிடித்திருக்கிறது.

569 பாமக வேட்பாளர்கள் களமிறங்கியதில் 5    வெற்றி பெற்றுள்ளனர்.  8417 மற்றும் 286 தபால் வாக்குகளுடன் சேர்த்து 115741 வாக்குகள் பெற்று 1.42 வாக்கு சதவிகிதத்தில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

அமமுக வேட்பாளர்கள் 879  பேர் களமிறங்கியதில் 3 வேட்பாளர்கள்  வெற்றி பெற்று 7602வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் 180 பெற்று மொத்தம் 112653 பெற்றுள்ளன.  1.38 சதவிகித வாக்கு பெற்று 8வது இடத்தில் உள்ளது.  

66 வேட்பாளர்களுடன் களமிறங்கிய மார்க்சிஸ்ட் 24 வெற்றியாளர்களை பெற்றிருக்க 69565 வாக்குகள் மற்றும்  302     தபால் வாக்குகள் சேர்த்து 106990 வாக்குகள் பற்று, 1.31 சதவிகிதம் பெற்று 9வது இடம் பிடித்திருக்கிறது.