இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம்... இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது.. அண்ணாமலை விளாசல்

 
sa

 திமுக அரசில் ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்.  தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து  உள்ளூர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

விருதுநகர் ரயில் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் சேர்த்த  அந்த இருபத்தி இரண்டு வயது இளம்பெண்ணுடன் அதே பகுதியில் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற 27 வயது இளைஞர் பழகி வந்திருக்கிறார்.    பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.   அந்த பெண்ணை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே காதல்போர்வையில் நடித்து வந்துள்ளார் ஹரிஹரன். ஆனால்,  அந்த இளம்பெண் இது தெரியாமல் ஹரிஹரனுடன் உண்மையாக பழகி வந்திருக்கிறார்.  

a

பெத்தனாட்சி நகரில் இருக்கும்  தனக்கு சொந்தமான மருந்து குடோனுக்கு உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார் ஹரிஹரன்.   திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர்தானே என்று அந்த இளம்பெண்ணும் அதற்கு  சம்மதித்துள்ளார்.   ஆனால்,    உல்லாசமாக இருந்ததை ஹரிகரன் திட்டமிட்டே ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார்.

 பின்னர் அந்த வீடியோவை வைத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.  அதுமட்டுமில்லாமல் அந்த ரகசிய வீடியோவே அவரது நண்பர்கள் 18 வயதுக்கு உட்பட்ட நான்கு பள்ளி மாணவர்கள் மற்றும் வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜீனத் அகமது(27), பிரவீன்(22),  மாடசாமி(37) ஆகியோருக்கும் அந்த வீடியோவை அனுப்பியிருக்கிறார்.  அவர்களும் அந்த பெண்ணை  வீடியோவை காட்டிமிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.  தொடர்ந்து இப்படி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வரவும்,   பாதிக்கப்பட்ட அந்த பெண் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

புகாரின் அடிப்படையில் பெண்ணின் காதலன் ஹரிகரன் , திமுக பிரமுகர் ஜுனைத் அகமது,  பிரவீன் , மாடசாமி மற்றும் 18 வயதுக்குட்பட்ட ஒன்பதாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  ‘’விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை  கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன்.  இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் - இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது ஒரு உள்ளூர் திமுக பிரமுகர்’’ என்று சொல்லும் அவர்,   ‘’ இந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமே, ஆனால், தற்போது  திமுக அரசில் ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்.  தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து  உள்ளூர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.