அழகிரியே பதில் சொல்.. பதுங்காதே! பாயும் அமெரிக்கை நாராயணன்

 
amerikkai

ஐந்து  மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.   இந்தியா முழுவதும் இரண்டு மாநிலங்கள் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது என்ற கடும் விமர்சனம் எழுந்திருக்கும் நிலையில்,   இந்தியா முழுவதும் காங்கிரசுக்கு 700  எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்று சமாளித்து வருகிறார்கள்.

c

 5 மாநில தேர்தலில் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற முடியாமல் உத்தரப் பிரதேசத்தில் இரண்டு இடங்களில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதால் கட்சித் தலைமைக்கு எதிராக கட்சியினரே கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.   நேரு குடும்பம் காங்கிரசிலிருந்து விலக வேண்டும் ராகுல் காந்தி தலைமைக்கு தகுதி இல்லை.  பிரியங்காவும் வெளியேற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்  தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

an

பாஜக மூத்த தலைவர் எச். ராஜா,  நேரு குடும்பத்தில் உள்ள அந்த மூன்று பேரும் அதாவது சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மூன்று பேரும் கட்சியை விட்டு வெளியேறினால் தான் காங்கிரஸ் கட்சி உருப்படும் என்று கூறியிருந்தார்.   ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே அக்கட்சியின் செய்தி தொடர்பாளரே ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியின் கட்சியை விட்டு வெளியேற வேண்டும்.  அவர்களுக்கு தகுதி இல்லை என்று கூறியது கட்சிக்குள் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ். அழகிரி,   அமெரிக்கை நாராயணனை கட்சியை விட்டு நீக்கி இருக்கிறார் .   

இதனால் கொதித்தெழுந்த அமெரிக்கை நாராயணன், என்னை நேரில்  விளக்கம் கேட்காமல் சமூக தளத்தில் விளக்கம் கேட்டு பிரச்சினையை, மக்கள் சமூக தளத்தில் விசாரிக்க வழிவகுத்த அழகிரியே!பாஜகவின் லஞ்ச லாவண்யத்தை திக வை திட்டியதுதான்,கட்சியை விட்டு விலக்கக் காரணமா?கே.எஸ்.அழகிரியே பதில்சொல் பதுங்காதே என்று கேட்டிருக்கிறார்.  பாஜகவும் திகவும் ஒண்ணுதான் என்று அமெரிக்கை நாராயணன் குற்றம்சாட்டியிருந்தார்.

as

மேலும்,  ‘’விளக்கம் கேட்காமல், 30 வருடமாக கட்சிக்கு சொந்தப் பணத்திலும் உழைப்பிலும் புகழ் சேர்த்த நான்,  காங்கிரஸ் கொள்கைக்கு எதிராக பேசியது
என்ன என்று கே.எஸ்.அழகிரி விளக்க வேண்டும். கடந்த 3 நாட்கள் நான் பேசியது அனைத்தும்  காங்கிரசை காப்பாற்றுவோம் என்றே!’’என்கிறார்.