விஜய் மக்கள் இயக்கம் திமுகவுக்கு ஆதரவா? இல்லையா?

 
வ்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பெரு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகிறது.  இந்த நிலையில் திடீரென்று தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லா ஜெகன்,  கடந்த சில தினங்களுக்கு முன்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் விஜய் மக்கள் இயக்கம் திமுகவையும் திமுக கூட்டணி கட்சியினரையும் ஆதரிக்கிறது என்று  அறிவித்தார்.

அ

 மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி விட்டுத்தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம் .   திமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து தலைமையுடன் ஒப்புதல் பெற்ற பின்னரே திமுகவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்.    திமுகவுக்கும்,   கூட்டணிக்கும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிர பிரச்சாரம் செய்வார்கள் என்று அறிவித்திருந்தார்.

 திமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு என்று தூத்துக்குடி விஜய் மக்கள் இயக்க தலைவர் பில்லா ஜெகன் அறிவித்திருந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த்,   விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு இல்லை  தனித்துப் போட்டியிடுகிறது என்பது போன்று  அறிவித்திருக்கிறார்.

எந்த கட்சியுடன் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது என்று அறிவித்திருக்கிறார்.

ட்ம்

 திமுகவுக்கு ஆதரவு என்று பில்லா ஜெகன் அறிவித்திருக்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்ததை அடுத்து அது குறித்துப் பில்லா ஜெகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப,   புதிய அறிக்கை விட்டிருக்கிறார்.   அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்திருக்கிறார்.  தலைமை ஒப்புதல் பெற்று திமுகவுக்கு ஆதரவு என்று சொன்ன சொல்லியிருக்கிறார் பில்லா ஜெகன்.  ஒருவேளை  ஒப்புதல் இல்லாமல் திமுகவுக்கு ஆதரவு அளித்ததால் தலைமை இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறதா? அல்லது திமுகவுக்கு ஆதரவு அளிக்க விஜய்யே சம்மதம் சொல்லிவிட்டு பின்னர் பின் வாங்கி கொண்டு தான் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்திருக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

 பில்லா ஜெகன் மீது தலைமை எந்த நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுக்காததால் திமுகவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று விஜய் முதலில் சம்மதம் சொல்லி விட்டு பின்னர் தான் ஜகா வாங்கி இருக்கிறார் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

கட்சியின் தலைமை அறிக்கைக்கு பின்னர் பில்லா ஜெகன் இன்னும் வெளிப்படையாக எதுவும் சொல்லாததால், தூத்துக்குடியில் விஜய் மக்கள் இயக்கம் திமுகவுக்கு ஆதரவா? இல்லையா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.