கட்சியை கலைத்து விட்டு மக்கள் பணியை செய்யுங்கள்... அண்ணாமலை

 
an

ஐந்து மாநில தேர்தல்களில் ஒரு மாநிலத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.   அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியினர் குறிப்பாக ராகுல் காந்தி சொல்லி வரும் நிலையில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.

 இந்த நிலையில் ஐந்து  மாநில தேர்தல்களில் நான்கு மாநிலத்தில் பாஜக வென்றுள்ளது.   இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

b

அப்போது அவர்,  ‘’ காங்கிரசுக்கான நேரம் முடிந்து விட்டது.  அதனால் கட்சியை கலைத்து விட்டு வேறு ஒரு ரூபத்தில் மக்கள் பணியை செய்யுங்கள் என சுதந்திரத்திற்கு பிறகு மகாத்மா காந்தி கூறியிருந்தார்.   70 ஆண்டுகளுக்கு ஆண்டுகள் கழித்து பின்னோக்கிப் பார்க்கும்போது காந்தியின் கூற்று உண்மைதானே என்று சாதாரண மக்களும் கேட்கும் நிலை வந்திருக்கிறது’’ என்றார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை,  ‘’மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி அமைக்கும் .   தமிழகத்திலும் கூட பாஜக 2024 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வருகிறதா அல்லது 2026ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வருகிறதா என்று தெரியாது.  தேர்தல் ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயாராகிவிட்டது என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்திருக்கிறார்.   இதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்.   தலைமை தேர்தல் ஆணையர் சொன்னதைப்போல நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு எல்லாம் முடிந்து வரும்போது தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.  அதனால்  தமிழகத்திலும் மிகப்பெரிய மாற்றம் காத்துக்கொண்டிருக்கிறது.  பாஜக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.