ரூம் போட்டு யோசித்த அதிருப்தி நிர்வாகிகள்

 
o

அதிமுகவின் அதிருப்தி நிர்வாகிகள் சென்னையில் உள்ள ஓட்டலில் ரூம் போட்டு அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அவசர  ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானதால் பரபரப்பு அதிமுகவில் சலசலப்பு அதிகரித்தன.

 சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும்.  அப்போதுதான் கட்சி வலுப்படும்.  திமுகவை எதிர்த்து வெற்றி பெறமுடியும் என்று வலியுறுத்தி வந்ததால் அதிமுக நிர்வாகிகள் பலரும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டுள்ளார்கள்.  அப்படி அதிமுகவின்  அதிருப்தி நிர்வாகிகளாக வெளியே பலர் இருக்கின்றனர் . அந்தவகையில் அதிருப்தி நிர்வாகிகளான புகழேந்தி மற்றும் ஆவின் வைத்தியநாதன் உள்ளிட்டோர் சென்னையில் அவசர ஆலோசனை நடத்தினர்.

or

 சென்னையில் உட்லண்ட்ஸ் ஓட்டலில் அறை எடுத்து அங்கு ஆலோசனை நடத்தி வந்தார்கள்.   இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ. ராஜாவும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகின.

 சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்றும் அவர் அதிமுகவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திருச்செந்தூரில் சசிகலாவை நேரில் சந்தித்து 20 நிமிடங்கள் பேசி இருந்தார் ராஜா.   அவருடன் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் சென்றிருந்தனர்.  இதை அறிந்த அதிமுக தலைமை ராஜா உள்ளிட்ட அவருடன் சென்றிருந்த நிர்வாகிகளையும் கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.   இந்த நிலையில் அதிமுகவின் அதிருப்தி நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தியது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.