ஸ்டாலின்,கனிமொழியை சொன்னபோது மட்டும் இனிச்சதா? ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க வைத்த ஜோதிமணி

 
r

பிரதமர் மோடியின் செயல்களைப் பார்த்து அம்பேத்கரை பெருமைப்படுவார் என்று இளையராஜா சொன்னதும் தான் போதும் பிடித்துக்கொண்டார்கள். அவர் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் சொன்னதை திரும்ப பெற வேண்டும் என்கிற அளவுக்கு அவரை போட்டு வறுத்து எடுத்து வருகிறார்கள்.  ஆனால் இளையராஜாவோ, நான்  மன்னிப்பு கேட்க மாட்டேன்.  நான் சொன்னதை திரும்ப பெற மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

 கருத்து சுதந்திரம் இருக்கிறது எல்லோருக்கும் .   அந்த அடிப்படையில்தான் தனது எண்ணத்தை தெரிவித்து இருக்கிறார் இளையராஜா.   இதற்காக அவரை ரவுண்டு கட்டி அடிக்கிறீர்களே என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் , மத்திய இணை அமைச்சர்,  முருகன்,  முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் , தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

k

 பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா,   தமிழகத்தின் மிகப்பெரிய இசைமேதை இளையராஜா.  அவர் சொன்ன ஒரு கருத்து ஆளும் கட்சிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவாக இல்லை என்பதற்காக அவரை தூற்றி அவரை அவமதிக்கின்றனர். இதுதான் ஜனநாயகமா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.   ஒருவர் பல்வேறு பார்வைகளை கொண்டு இருக்கலாம்.  அதற்காக ஒருவர் அவமானங்களை ஏன் ஏற்க வேண்டும்?  என்றும் அவர் கேட்டிருந்தார்.

 இதையடுத்து திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி,   இளையராஜா விவகாரம் குறித்து பதிவிட்டிருந்தார்.  அந்த பதிவில் ரஜினியையும் இழுத்து பேசியிருந்தார்.   ரஜினியை வம்புக்கு இழுத்து பேசியதாக அவரது ரசிகர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

’’இளையராஜாவின் இசை தமிழ் மண்ணின் ஆத்மார்த்தமான அடையாளங்களில் ஒன்று.  அதற்காக அவரை நாம் என்றென்றும் நேசிப்போம். ஆனால் அம்பேத்கருக்கு இணையாக மோடியை உயர்த்தி அவர் பேசுவதை வெறும் அரசியல் புரிதலற்ற நிலைப்பாடு என்று கடந்து போய்விட முடியாது.  ஆனால் தமிழ் மண் எச்சரிக்கையும் , விழிப்புணர்வும் மிகுந்தது. அன்பை, அமைதியை, ஒற்றுமையை, வளர்ச்சியை விரும்புவது.  இதற்கு எதிரான ஆர் எஸ் எஸ்/ பாஜக பாசிச சித்தாந்தை யார் கையில் எடுத்தாலும் அவர்களை , இரக்கமற்று தோலுரித்து தொங்கவிடும்  வழக்கமுடையது. 

jo

ஆர் எஸ் எஸ் / பாஜக பாசிச ,பிரிவினைவாத, வன்முறை சித்தாந்தம் ஊடுருவும் பல வழிகளில் இதுவும் ஒன்று. சமூகத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை தனக்கு ஆதரவாகப் பேசவைப்பது. அதற்கென்று ஒரு விலையையும் அது வைத்திருக்கும். முன்பு ரஜினிகாந்த்,இன்று இளையராஜா.

இளையராஜாவுக்கும் அதுதான் நேர்ந்துள்ளது.  ஒரு கருத்தைக் கூறுவது ஒருவரின் உரிமை. அந்தக் கருத்து  சமூகத்திற்கு எதிராக இருக்குமென்றால் அதற்கான கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.   கருத்துரிமையும், விமர்சிக்கும் உரிமையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இன்று இளையராஜாவிற்காக கருத்துரிமைக் காவலர் வேடம் பூண்டுள்ள பாஜக, ஏன் மக்கள் விரோத மோடி அரசிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பவர்களின் கருத்துரிமைக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது?’’என்று கேட்டிருந்தார்.

பிரதமர் மோடியை பலவாறாக தரக்குறைவான வார்த்தைகளால் இழித்தும் பழித்தும் பேசும் எதிர்க்கட்சியினர் மீது இன்றுவரை யாதொரு நடவடிக்கையும்
எடுத்ததில்லை.ஆனால் திமுகவையும் சுடாலினையும் விமர்சனம் செய்வோரைத் திமுக அரசு கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளுகிறது. இதில் யார் ஜனநாயகவாதி? என்றும், 

ra

தங்களை வெளியே போடி என்றவரை கடந்து போய் விட்டீர்களா பிராடுமணி.ஒப்பிட்டு பேசவில்லை அம்பேத்கார் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார், என்பதில் அம்பேத்கரை குருவாகவும் மோடியை அம்பேத்கரின் மாணவராகவுமே இசைஞானி காட்டியுள்ளார். உங்கள் கீழ்தரமான அரசியலை இசைஞானியிடம் காட்டாதீர் என்றும்,

கனிமொழியை வேலு நாச்சியாருடன் ஒப்பிட்டது இனித்தது..! நெல்லை கண்ணன், ஸ்டாலினை காமராஜரோடு ஒப்பிட்டு பேசும் போதும் இனித்தது..!
ஸ்டாலினை அம்பேத்கருடன் ஒப்பிடும் போதும் கூட்டமா கைதட்டி குதுகலீக்க தெரிகிறது..  ஏன் உங்க தமிழக கமிட்டி ஒனரை காமராஜருடனும் அம்பேத்காருடனும் ஒப்பிட்டு பேசிய போது நல்ல இருந்துங்களா அக்கா. இப்போழுது நீங்கள் தான் ஒரு மனிதரின் கருத்துரிமையை நசுக்குகிறீர்கள் என்றும்,

உங்களை யார் கடந்து போக சொன்னது அறிவாலய வாசலில் நில்லுங்க அறிவு இல்லாத ஆள தலைவர வைச்சுக்கிட்டு நீங்க அறிவு பற்றி பேசலாமா என்றும் கடுமையாக ஜோதிமணிக்கு  பதிலடி கொடுத்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.