அவர் திமுக நிர்வாகிதான்! ஆனால், அது திமுக கணக்கில் சேராது! #ஒத்தஓட்டுதிமுக சர்சை!

 
ட்ம்

 ஒத்த ஓட்டு பாஜக என்று திமுகவினர் வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வந்த நிலையில்,  அதற்கு எதிராக #ஒத்தஓட்டுதிமுக என்று பாஜகவினர் வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வந்தனர்.

 நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக அதிக அளவில் வெற்றி பெற்று இருபத்தி ஒரு மாநகராட்சிகளையும் தன்வசப்படுத்தி இருக்கிறது.   அப்படியிருக்கும்போது ஒரு வார்டில் திமுக ஒத்த ஓட்டு மட்டும் வாங்கி இருக்கிறதா? என்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது . பின்னர் இதன் உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து திமுகவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

வ்

 கடந்த ஆண்டு கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சியில் 9-ஆவது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் கார்த்திக் வெறும் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றார்.   இதனால் ஒத்த ஓட்டு பாஜக என்று திமுகவினர் பிரச்சாரம் செய்து வந்தனர்.  இது பாஜகவினரை கொந்தளிக்க வைத்தது.   இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி 11 வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றதால் #மீண்டும்ஒத்தஓட்டுபாஜக என்று திமுகவினர் வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தனர்.   டுவிட்டரில் இந்த ஹேஷ்டேக்கை டிரெண்ட்   செய்து வந்தனர்.

ப்ஜ்

இதனால் ஆத்திரம் கொண்ட பாஜக,  இதற்கு பதிலடியாக #ஒத்தஓட்டுதிமுக என்ற வலைத்தளத்தில் பரப்பி வந்தனர்.   இது உண்மையா? நடந்தது என்ன?

 கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் பேரூராட்சியில் நாலாவது வார்டு திமுக பிரமுகர் முருகன் என்பவர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார்.   இதற்காக அவர் கட்சியில் விருப்ப மனு அளித்திருக்கிறார்.  ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தையையில் இந்த வார்டு காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.   இதனால் விரக்தி அடைந்த முருகன் சுயேட்சையாக களம் இறங்கியிருக்கிறார்.

ரு

 இரணியல் பேரூராட்சி நாலாவது வார்டில் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்து களமிறங்கிய முருகன்,   ஏற்கனவே இரண்டு முறை திமுக சார்பில் வார்டு கவுன்சிலராக இருந்ததால் அந்த செல்வாக்கில் இவர் வெற்றி பெறுவார் என்று எல்லோரும் நினைத்திருந்தனர்.   ஆனால் தேர்தல் முடிவில் அவர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றிருக்கிறார்.   அந்த ஒரு ஓட்டும் அவர் தனக்குத்தானே போட்டுக்கொண்ட ஓட்டு என்று தெரியவந்திருக்கிறது.

ட்ம்

 முருகனுக்கு அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் கூட யாரும் ஓட்டுப் போடவில்லை என்பது  முருகனுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கிறது.   இதன் பின்னர்தான் #ஒத்தஓட்டுதிமுக என்று வலைத்தளங்களில் முருகன்  டிரெண்டாகி வந்திருக்கிறார்.   உடனே திமுகவினர்,   அவர் திமுக அதிமுக நிர்வாகி தான். ஆனால், திமுக சார்பில் போட்டியிடவில்லை. அதனால் அவர் வாங்கிய ஓட்டு திமுக கணக்கில் வராது  என்று சொல்லி விளக்கம் கொடுத்து வருகின்றனர். ஆனாலும், பாஜகவின் இதை தங்களுக்கு கிடைத்த ஆயுதமாக எடுத்துக்கொண்டு,  ’அவர் திமுக நிர்வாகிதானே’ என்று  பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.