தினமும் திட்டுவோம் - ஆளுநருக்கு துரைமுருகன் எச்சரிக்கை

 
ட்ட்

நீட் விலக்கு கோரி மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.   இந்த மசோதாவை ஆளுநர்,   குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்து வருகிறது.

 இந்த நிலையில் வேலூரில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய  திமுக பொதுச் செயலாளரும்,  அமைச்சருமான துரைமுருகன்  நீட் விவகாரம் குறித்துப்பேசினார். 

டி

அவர்,   234 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நீட் தேர்வு தொடர்பாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அதனை ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுனரிடம் அனுப்பி வைத்தும்  அவர் அதை வாங்கிக்கொண்டு கிடப்பில் போட்டுவிட்டார்.  

 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தில் அடித்தார் போல் அதை திருப்பி அனுப்பிவிட்டார்.   ஆனால் மீண்டும் அதனை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி சுவற்றில் அடித்த பந்து போல ஆளுநருக்கு தீர்மானம் அனுப்பியிருக்கிறோம்.    இதனை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பினால் சனியன் தொலைந்தது என்று அவர் இருந்துவிடலாம் .   இல்லையென்றால் தினமும் ஆளுநரை திட்டிக் கொண்டே இருப்போம் என்று எச்சரிக்கை விடுக்கும் படி பேசினார்.