அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற்றுகையிட்ட திமுக மகளிரணி

 
se

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு இன்றுடன் நிறைவடைகிறது.    இதையடுத்து திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.   பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்து முடித்துவிட்டு பிரச்சாரத்தில் தொடங்கியிருக்கின்றனர்.

d

இந்நிலையில்,  கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு மகளிரணியினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் திமுக நிர்வாகிகள் மனைவி மகளுக்கு மட்டுமே சீட்டை ஒதுக்கி இருப்பதாகவும் புகார் கூறிய திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள்,   மகளிர் அணி நிர்வாகிகள் தலைமையில் கோவை பீளமேடு அருகில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

 இரவு நேரத்தில் நடந்த இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.   திமுகவில் 50 சதவீத இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மகளிர் அணியில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 இந்த விவகாரத்தை கட்சித் தலைமைக்கு எடுத்துச் செல்லவே அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக பெண்கள் தெரிவித்துள்ளனர். கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்த மகளிருக்கு உரிய வாய்ப்பு வழங்காமல் நிர்வாகிகளின் மனைவிகளுக்கு வாய்ப்பு வழங்குவதாக அவர்கள் கோஷம் எழுப்பி தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ,   போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி  அனுப்பி வைத்துள்ளனர்.