கூட்டணி கட்சிகளுக்கு கையை விரித்த திமுக மேலிடக்குழு

 
வ்ச்

மேயர்,  துணை மேயர் என்று ஒன்பது மேயர் பதவிகள் தங்கள் கட்சியினருக்கு வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.   திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினரும் தங்களுக்கு ஆவடி, தாம்பரம், திருச்சி, கோவை , கன்னியாகுமரி, சிவகாரி மாநகராட்சிகளில் மேயர்,  துணை மேயர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினரும் தங்கள் தரப்பில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.   ஆனால் 21 மேயர் பதவிகளும் திமுகவுக்கு தான் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க வாய்ப்பு இல்லை என்று கூட்டணிக் கட்சியினரின் எதிர்பார்ப்புக்கு கையை விரித்திருக்கிறது திமுக மேலிடக் குழு.

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றுக் கொள்கிறார்கள் .   நாளை மறுதினம் மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சித் தலைவர் துணைத்தலைவர்,  பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர்கள்,  கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.  காலையில் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர் தேர்தலும்,  மாலையில் துணை மேயர்,  துணை தலைவர்கள் தேர்வுகளும் நடைபெற இருக்கின்றன. 

ar

 இந்த நிலையில் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள்,  காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் கட்சியினருக்கு பதவிகளை வழங்க வேண்டுமென்று திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

 சென்னை மேயர் மற்றும் 8 துணை மேயர் பதவி உள்பட 9 மேயர் மற்றும் துணை மேயர் பதவிகள் தங்கள் கட்சியினருக்கு வழங்க வேண்டும் என்று திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினிடம் நேரிடையாகவே கோரிக்கை வைத்திருக்கிறார்.   காங்கிரஸ் கட்சியினரும் திருச்சி, கன்னியாகுமரி, சிவகாசி, ஆவடி, தாம்பரம், கோவை ஆகிய மாநகராட்சிகளில் துணை மேயர் பதவி வேண்டுமென்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் பதவிகள் வேண்டுமென்றும் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது. இதேபோல் திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினரும் தங்கள் தரப்பில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

அரி

 இதனால் இதற்கென்றே கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் நேரு,  வேலு மற்றும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான ஆ. ராசா உள்ளிட்டோர் அடங்கிய மேலிடக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மேலிட குழுவினர் கூட்டணிக் கட்சியினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.   அப்போது 21 மேயர் பதவிகளும் திமுகவுக்குத்தான்.   மேயர் பதவிகளை கூட்டணி கட்சிக்கு கொடுக்க வாய்ப்பே இல்லை என்று கையை விரித்துள்ளனர். இதையடுத்து திருமாவளவன் அறிவாலயத்திற்கே நேரில் சென்று திமுகவில் மேலிட குழுவினரை சந்தித்து தங்கள் கட்சியினருக்கு மேயர் பதவி தருமாறு வலியுறுத்தி இருக்கிறார்.  ஆனால் திமுகவின் மேலிட குழு கறாராக இருக்கிறதாம்.