துர்கா -துரை சந்திப்பால் உ.பிக்கள் வருத்தம்

 
dd

மதிமுகவில் தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டது முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.  கட்சி நிகழ்வுகள் கட்சியினர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் துரை வைகோ பங்கேற்று வருகிறார்.

dd

 திருநின்றவூர், கோவில்பட்டி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், நாகப்பட்டினம், சீர்காழி, ஆவடி என்று பல்வேறு இடங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்து வந்துள்ளார் .  சுற்றுப்பயணத்தின்போது அவர் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.  வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கும் சென்று வந்திருக்கிறார்.

 இதன் பின்னர் கட்சி நிகழ்வுக்காக மயிலாடுதுரை மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார்.   போகும் வழியில் அப்போது முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சொந்த ஊரான திருவெண்காட்டிற்கு வந்திருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது.    உடனே துரை வைகோ அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

 துர்கா ஸ்டாலினையும்  அவரது குடும்பத்தினரையும் சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார்.   உடன் மதிமுக நிர்வாகிகளும் சென்றிருக்கிறார்கள்.

dd

அதன்பின்னர்,   துர்கா ஸ்டாலினையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்த  படங்களையும்,  உரையாடல் குறித்த தகவல்களையும் சமூக வலைத்தளத்தில் உடனே  பதிவிட்டு இருக்கிறார் துரைவைகோ.  ‘’திருவெண்காட்டில் துர்கா அம்மையாரைச் சந்தித்தேன்...!  தமிழ்நாடு முதலமைச்சர் மனைவி என காட்டிக் கொள்ளாமல்,  இன்முகத்துடன் வரவேற்றுப் பேசிய அம்மையார் துர்கா அவர்களின் பண்பு நலன் என்னை ஈர்த்தது’’என்று பதிவிட்டிருக்கிறார்.

 சமூக வலைதளத்தில் துரைவைகோ பதிவேற்றம் செய்த பின்னர்தான் துர்கா ஸ்டாலின் வந்திருக்கும் தகவல்  மயிலாடுதுறையை மாவட்ட திமுகவினருக்கு தெரிய வந்திருக்கிறது.  தலைவரின் மனைவி தங்கள் மாவட்டத்திற்கு வந்திருக்கும் தகவல் தங்களது தெரியவில்லை.  ஆனால் மதிமுகவினருக்கு தெரிந்திருக்கிறதே என்று சொல்லி,  மயிலாடுதுறை மாவட்ட திமுக நிர்வாகிகள் வருத்தத்தில் உள்ளார்களாம்.