அமித்ஷாவுக்கு திமுக விடுத்த அழைப்பு

 
aம்

 தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ’அண்ணா’ அறிவாலயம் இருப்பதுபோல்,  இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் ’அண்ணா - கலைஞர்’ அறிவாலயம் அமைந்திருக்கிறது.  வரும் ஏப்ரல் 2ஆம் தேதி இதற்கான திறப்பு விழா நடைபெறுகிறது.  இத் திறப்பு விழாவிற்கு பாஜகவின் முக்கிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது திமுக.

ஐ

 டெல்லியில் திறக்கப்பட இருக்கும் அறிவாலய திறப்பு விழாவில்  திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.  காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக எம்பிக்கள் நேற்று நேரில் சந்தித்து விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

 இன்று உள்துறை அமைச்சரும்,  பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி. ஆர். பாலு சந்தித்து அறிவாலயம் திறப்பு விழாவிற்கு வருமாறு அழைப்பிதழை அளித்துள்ளார்.  

 திமுக விழாவிற்கு பாஜகவை அழைத்திருப்பது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.