’’நடப்பது திமுக ஆட்சி’’-திமுக! ’’நடப்பது பாஜக ஆட்சி ’’-பாஜக!

 
ர்ர்

பிரதமர் நரேந்திரமோடி வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து திமுக கடுமையாக விமர்சித்து வந்தது.  இதற்கு பதிலடியாக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றிருப்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார்.  அதற்கு அவர் மீது நஷ்ட ஈடு கேட்டு திமுக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

ட்ட்

இதன் பின்னர்,  ஒரு முதலமைச்சர் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்காக வெளிநாட்டுக்கு பயணம் செய்வது குறித்து கொச்சைப்படுத்தி பேசுவது எந்த வகையில் நியாயம்? அப்படி பார்த்தால் பிரதமர் மோடி அவர்கள் 64 முறை வெளிநாடு போனார். முதலீடு செய்வதற்காக தான் போனார் என்று சொல்லி விட முடியுமா?  என்று திமுக ஆர் எஸ் பாரதி கேட்டிருக்கிறார்.

இதற்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,  பிரதமர் நரேந்திர மோடி, அவரின் குடும்ப உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லவில்லை. அரசு முறை பயணமாக முதல்வர்   ஸ்டாலின் செல்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.   ஆனால் அவரின் குடும்ப உறுப்பினர்களை அழைத்து சென்றது ஏன்? இசையமைப்பாளர் ரகுமானை பார்ப்பதற்காகவா? ஏ .ஆர். ரகுமான் அவர்களை சென்னையிலேயே பார்க்கலாமே? துபாயில் ஏன் பார்க்க வேண்டும்?  விடுமுறை பயணத்தை அரசு பயணம் என்று அழைப்பதேன்? என்று கேள்வி எழுப்பி  இருக்கிறார்.

ர்ச்

அடுத்து,  நடப்பது தி மு க ஆட்சி; அண்ணாமலை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  என்று திமுகவின் ஆர் எஸ் பாரதி விடுத்துள்ள எச்சரிக்கைக்கு,  நடந்து கொண்டிருப்பது பாஜக ஆட்சி. சட்டம் தன் கடமையை செய்யும். சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார் நாராயணன் திருப்பதி.