பைத்தியத்துக்கு பதில் சொல்ல முடியாது - மம்தா மீது காங்., பாய்ச்சல்

 
mn

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது.   ஒரு மாநிலத்தில் கூட அக்கட்சி வெற்றி பெற முடியாமல் போயிருக்கிறது .அதுவும் உத்திரப்பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது.   இதனால் அக்கட்சி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.  

இந்திய அளவில் இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது.  இந்த நிலையில் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது.

a

 இந்த சூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  ’’வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது அவசியம் .   அதற்காக இனி காங்கிரசை நம்பி எந்த பலனும் இல்லை.   காங்கிரஸ் கட்சி அதன் செல்வாக்கையும் நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது’’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

 இதற்கு மேற்குவங்க பாஜக தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்திருக்கிறார் .  ‘’மம்தா பானர்ஜி பைத்தியக்காரத்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார்.  பைத்தியத்துக்கு எல்லாம் நம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.  அடிப்படை புரிதல் இல்லாமல் அவர் பேசி வருகிறார்.   காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் 700 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.  ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்கத்தை தாண்டி எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்?’’ என்ற கேள்வியை எழுப்பியவர்,  ‘’ எதிர் கட்சிகளின் மொத்த வாக்கு சதவீதத்தை விட காங்கிரஸ் கட்சிக்கு அதிகமாகவே 20 சதவீதத்திற்கும் மேலான வாக்கு வங்கி இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.