அழகிரி முன்னிலையில் அடித்துக்கொண்ட காங்கிரசார்

 
c

அழகிரியின் முன்னிலையிலேயே காங்கிரஸார் அடித்துக்கொண்டதால் சத்தியமூர்த்தி பவனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  அதுவும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்த அடிதடி நடந்தது.

 சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது மாநில அளவிலான நிர்வாகிகள் அழகிரியுடன் மேடையில் அமர்ந்திருந்தனர். 

co

 திடீரென்று பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த நிர்வாகி பன்னீர்செல்வம் எழுந்து,  மேடையில் அமர்ந்திருந்த முனுசாமி பார்த்து, ‘’ மேடையிலிருந்து இறங்கு’’ என்று சத்தம் போட்டு சத்தம் போட்டார்.  மேடையில் தனக்கு நாற்காலி இல்லை என்பதால் முனுசாமியை கீழே அழைத்தார் பன்னீர்ச்செல்வம்.

 முனுசாமி இறங்க மறுத்ததால் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டே இருந்தார்.  இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.   பின்னர் மோதல் போக்கு உருவானது.   இதை தடுக்க முற்பட்ட மற்ற காங்கிரஸார் பன்னீர் செல்வத்தை சரமாரியாக தாக்கி வெளியே அனுப்பி விட்டனர்.  இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே அடிதடி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

 இத்தனை களேபரம் நடந்து கொண்டிருக்கும் போது அமைதியாக மேடையில் அமர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தார் அழகிரி.   ஒருவழியாக நிர்வாகிகள் அடிதடி முடிந்து அமைதியான பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்ந்தது.  

 காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னிலையிலேயே நிர்வாகிகள்,  அதுவும் செய்தியாளர் சந்திப்பிலேயே நாற்காலிக்கு சண்டை போட்டுக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.