9 பேர் தாவிவிட்ட நிலையில் 2 பேர் காட்டிய விஸ்வாசம்

 
hhh

ராஜேந்திர பாலாஜிக்கு விசுவாசமாக இருப்பேன் என்று சொல்லி பதவி ஏற்றுக்கொண்ட மாமன்ற உறுப்பினரின் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி முதன்முதலாக அறிவிக்கப்பட்டு மேயராக பெண் ஒருவர் அலங்கரிக்க இருக்கிறார்.   இந்த நிலையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 48 வார்டுகளை கொண்ட சிவகாசி மாநகராட்சியில் 2 அதிமுக உறுப்பினர்கள் தவிர மற்ற அனைவரும் திமுகவில் இணைந்துவிட்டனர் இதனால் தற்போது திமுகவின் பலம் 45 ஆக அதிகரித்திருக்கிறது.

ra

 சிவகாசி மாநகராட்சியில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி இன்று  ஏற்றுக்கொண்டனர்.  அதிமுகவை சேர்ந்த ஒன்பது மாமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துவிட்ட நிலையில் அதிமுகவை சேர்ந்த 30 ஆவது வார்டு பகுதியில் வெற்றி பெற்ற கரை,  முருகன் என்பவர் பதவி ஏற்கும்போது ’’புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கழக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிவிட்டு,  மற்றும் அரசியல் ஆசான் ராஜேந்திரபாலாஜி ஆகியோருக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன் என்று சொல்லி பதவி ஏற்றுக் கொண்டார். 

 அதிமுக உறுப்பினர்கள் திமுகவில் இணைந்திருக்கும் நிலையில் மேலும் அதிமுக உறுப்பினர்களை திமுகவில் இணைக்க முயற்சியை நடந்து வரும் நிலையில் அதிமுக மாமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு பேசியிருக்கும் வீடியோ வலைத்தளங்களில், குறிப்பாக அதிமுக வட்டாரத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.