8.62 % ஓட்டுகள்- கோவையில் 3வது பெரிய கட்சி பாஜக

 
கொ

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு பல இடங்களில் வென்றிருக்கிறது. தலைநகர் சென்னை மாநகராட்சியில் கூட வெற்றியை பதிவு செய்திருக்கிறது.  அதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவையில் வெற்றி பெறவில்லை.

கோவையில் வெற்றி  பெறாவிட்டாலும் கூட 8 .62 சதவிகித வாக்குகளைப் பெற்று திமுக, அதிமுகவிற்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

 கோவை மாநகராட்சியில் பாஜக 97 வார்டுகளில் போட்டியிட்டது.   ஐந்து முதல் பத்து வார்டுகளில்  வெற்றி பெறவேண்டும் என்ற இலக்கோடு பிரச்சார வியூகங்களை வகுத்து தேர்தல் பணியாற்றியுள்ளனர்.   ஆனால் ஒரு வார்டில் கூட வெற்றி வாய்ப்பை பெற முடியாவிட்டாலும் கூட 72 ஆயிரத்து 393 வாக்குகளை பெற்றிருக்கிறது பாஜக. இது 8.  62% ஆகும்.

வ

 5 வார்டுகளில் இரண்டாம் இடம் பெற்றிருக்கிறது பாஜக.   71 வார்டுகளில் மூன்றாம் இடம் பெற்றிருக்கிறது .   சில வார்டுகளில் அதிமுக வேட்பாளர்களை நான்காம் இடத்திற்கு தள்ளி இருக்கிறது.    இந்த தேர்தல் முடிவு குறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவியும்,   கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ,   கோவை மாநகராட்சியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் கொலுசு சத்தத்தை தாண்டியும் அதிகமான வாக்குகளை பெற்று மகத்தான சாதனை புரிந்திருக்கின்றனர்.  

 காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி கட்சி பலத்தோடு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கின்றன.  ஆனால் எங்களைப் போல் தனித்து நின்று இவ்வளவு வாக்குகளை பற்றி இருக்க வாய்ப்பில்லை.   கோவையில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக நிற்கிறது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.