முதல்வர் ரங்கசாமி-நடிகர் விஜய்: புதுச்சேரி எங்கும் கட் -அவுட், பேனர்கள்

 
r

 விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்லி ஆனந்த்,  புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.  

புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் ரங்கசாமியும்,  நடிகர் விஜய்யும் சந்தித்துக்கொண்ட அந்த புகைப்படங்கள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் கட்-அவுட்  மற்றும் பேனர்களாகவும் வைக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

rv

விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் பரவி வரும் நிலையில்,  அண்மையில் புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் ரங்கசாமி,  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் விஜய் இல்லத்தில் விஜய்யை சந்தித்து பேசினார்.   இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

vr

 இதன் பின்னர் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளரும்,  புதுச்சேரி மாநில விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவருமான புஸ்லி ஆனந்த் புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் பலமுறை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றார் என்று தகவல்.

vv

 இந்த நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி அன்று திரைக்கு வர இருக்கிறது.   இதை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் பிரம்மாண்ட கட் -அவுட்,  பேனர்கள் வைத்துள்ளனர்.   ரசிகர்கள் வைத்திருக்கும் பெரும்பாலான பேனர்களில் முதல்வர் ரங்கசாமியும் விஜய்யும்  சந்தித்துக் கொண்ட படம் இடம் பெற்றுள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .