போட்டோவுக்கு போஸ் -திமுக கவுன்சிலர்கள் மோதல்

 
dக்

 போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே நடந்த மோதல் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

 இன்று போலியோ சொட்டுமருந்து  முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.   திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சொட்டு மருந்து முகாமை  ஆட்சியர் சிவராசு  துவக்கி வைத்தார்.

அப்போது மிளகுபாறை பகுதியைச் சேர்ந்த 54 வது வார்டு திமுக கவுன்சிலர் புஷ்பராஜ் பங்கேற்று ஆட்சியருடன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.   அந்த சமயத்தில்  கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த 55 வது வார்டு திமுக கவுன்சிலர் ராமதாசும் ஆட்சியர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்றார். அவர் ஆட்சியருக்கு பின்னால் நின்று போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.

ட்

ஆட்சியர் சென்ற பின்னர்,  என் வார்டுக்கு நீ  எப்படி வரலாம் என்று புஷ்பராஜ் கேட்டபோது,   அதற்கு சரியாக பதில் சொல்லாமல் நகர்ந்தார் ராமதாஸ்.  இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.   எனக்கு முன்பாக நீ எப்படி முந்திக்கொண்டு போஸ் கொடுக்கலாம் என்று ராமதாஸ் இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றி இருதரப்பு ஆதரவாளர்களும் தகராறில் ஈடுபட்டனர்.

 இதை பார்த்து பதறிப்போன போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.   ஆனாலும் அவரது ஆதரவாளர்களால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.