மீண்டும் கோஷ்டி பூசல் -இபிஎஸ்க்கு எதிராக போஸ்டர்

 
ஒப்

 உட்கட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஓய்ந்திருந்த கோஷ்டி பூசல் உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்னர் மீண்டும் வெடிக்க தொடங்கியிருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வந்ததை கட்சியினரும் விரும்பவில்லை.  இதனால்தான் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டில் ஒற்றை தலைமையின்கீழ் அதிமுகவை கொண்டுவந்துவிட நினைக்க,   அதையே ஓ. பன்னீர்செல்வம் நினைக்க,  இருவருக்கும் இடையே கோஷ்டி பூசல் வெடித்துக் கொண்டிருந்தது.

ஒப்ப்

 இதற்கிடையில் சசிகலா உள்ளே நுழைந்து அதிமுகவுக்கு தலைமை ஏற்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார்.  எதுவும் பலனளிக்கவில்லை.  இந்த நிலையில்தான் அதிமுகவுக்கு உட்கட்சித் தேர்தல் நடந்தது.   இந்த தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும்,  எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.  இதன்பின்னர் கோஷ்டி பூசல் ஒழிந்தது.    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.

 தேர்தல் தோல்விக்குப் பின்னர் 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியை கூட அதிமுக கைப்பற்ற முடியாமல் போனதால் கட்சிக்குள் மீண்டும் பூசல் வெடிக்கத் துவங்கியிருக்கிறது.  ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சி இயங்கினால்தான் வெற்றி சாத்தியம் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்லி தனது கட்டுப்பாட்டின் கீழ் அதிமுகவை கொண்டுவர மீண்டும் விரும்புகிறார் என்ற தகவல்.  இதற்கு பன்னீர்செல்வம் தடையாக இருப்பதாக அவரும் அவரது ஆதரவாளர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

எ

 இந்த நிலையில் கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் ஓ. பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி இருவருமே பங்கேற்றுள்ளனர். அதன் பின்னர் புழல் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் மட்டுமே சென்றிருக்கிறார்கள்.  பன்னீர் செல்வத்திற்கும்,  அவரது ஆதரவாளர்களுக்கும் தகவல் கூட தெரிவிக்கவில்லையாம்.

 இதனால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்து இருக்கிறது.   இந்த நிலையில்,  ‘அதிமுகவுக்கு தொடர் தோல்வியை தரும் பழனிச்சாமி பதவி விலக வேண்டும்’ என்று சிலர் சென்னையில் போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார்கள்.  இது எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்  எடப்பாடி பழனிச்சாமி -ஓ .பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு இருப்பது அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.