கதறுவதை கேட்க முடிகிறது; பயத்தோடு தவிப்பதை ரசிக்க முடிகிறது - கம்யூனிஸ்டுக்கு பாஜக பதிலடி

 
ச்

 இனிமேல் பாஜகவை போல கம்யூனிஸ்டுகளும் கோவில் திருவிழாக்களில் பங்கேற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அதிரடியாக அறிவித்து இருக்கிறார். 

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது மாநில மாநாடு வரும் 30ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கிறது .  இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் நேற்று மதுரையில் ஆலோசனை நடத்தினார்.   இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,   சிறுசிறு பிரச்சனைகளை கூட பாஜக பெரிதாக்கி மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.   தமிழகத்தில் காவி கலாச்சாரத்தை புகுத்த முயற்சிக்கிறது.    கோவில் திருவிழாக்களில் ஆர்எஸ்எஸ் கொடிகளை கட்டி விழா நடத்துவது போல அவர்கள் மக்களிடம் தங்களது கொள்கையை புகுத்த முயற்சிக்கிறார்கள்.   பாஜகவின் இந்த சூழ்ச்சியை முறியடிக்க இனிமேல் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கோவில் திருவிழாக்களில் பங்கேற்கும்.   திமுகவோடு இணைந்து  கம்யூனிஸ்ட் கட்சியும் பாஜகவை எதிர்க்கும் என்று தெரிவித்தார்.

ன்

பொது மக்களின் ஆன்மீக உணர்வுகளை மத அடிப்படைவாதமாக மாற்ற முயற்சிக்கிறது  ஆர்எஸ்எஸ்  என்ற கே.பாலகிருஷ்ணன் பேச்சுக்கு,  ‘’மதஅடிப்படைவாதிகளை ஆன்மீகவாதிகளாகவும், நக்சல்களை சமூக செயற்பாட்டாளர்களாகவும், சித்தரிப்பதே கம்மிகளின் தொழில்’’ என்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

தமிழகத்தில் ஆர். எஸ். எஸ், பாஜகவினரின் ஆதிக்கத்தை தடுக்க  கோவில் திருவிழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் இனி பங்கெடுப்போம் பாலகிருஷ்ணன் அறிவிப்புக்கு,   ’’பாஜக தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என்றவர்களின் கால்கள் நடு நடுங்கி தடுமாறுவதை காண முடிகிறது. மதமே இல்லை என்று சொன்னவர்கள்  பயத்தோடு தவிப்பதை ரசிக்க முடிகிறது. முற்போக்கு என்ற பெயரில் கலாச்சாரத்தை சீரழித்தவர்கள், கலாச்சார நிகழ்வுகளில் பங்கெடுப்போம் என்று கதறுவதை கேட்க முடிகிறது’’என்கிறார் நாராயணன்.