நாலு வாக்குகளில் நழுவவிட்ட பாஜக! நாகர்கோவிலை கைப்பற்றியது திமுக

 
ன்

நான்கு வாக்குகளில் பாஜக மேயர் பதவி நழுவிப்போய்விட திமுகவின் வசமானது நாகர்கோவில் மாநகராட்சி.

 நாகர்கோவில் மாநகராட்சி அறிவிக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தலில் மொத்தமுள்ள 52 வார்டுகளில் திமுக இருபத்தி நான்கு இடங்களிலும்,  மதிமுக ஒரு இடத்திலும் , காங்கிரஸில் 7 இடத்திலும் என்று திமுக கூட்டணி மொத்தம் 32 வார்டுகளை கைப்பற்றியது.   பாஜக 11 இடங்களிலும் அதிமுக 7 இடங்களிலும்,  சுயேட்சைகள் இரண்டு இடங்களையும் கைப்பற்றின.

ப்

 இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ஆர். மகேஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் . பாஜக சார்பில் மேயர் பதவிக்கு மீனாதேவ் போட்டியிட்டு இருந்தார்.   

 மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.   இதற்காக திமுக மேயர் வேட்பாளர் மகேஷ்,  திமுக கவுன்சிலர்களுடன் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் வந்தார்.   அதன்பின்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.    பாஜக சார்பில் மீனா தேவ் போட்டியிட்டார்.   அதன்பின்னர் நடைபெற்ற மறைமுக தேர்தலில் கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.

 பின்னர் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 28 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் மகேஷ் வெற்றி பெற்றார்.   24 வாக்குகள் பெற்று 4 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் மீனாதேவ் வெற்றியை நழுவ விட்டார்.