தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த அசாதுதீன் ஓவைசி

 
o

தமிழகத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி. 

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் தேதியன்று நடைபெற்றது.   நடைபெற்றது.   மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்  நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் வாக்குப்பதிவில் 61 சதவீத வாக்குகள் பதிவானது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ஒந்

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 90 சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறது.  அதிமுகவின் முக்கிய இடங்களான போடி,  எடப்பாடி,  தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களையும் திமுக கைப்பற்றியிருக்கிறது.

 இந்த நிலையில்  வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டில் அசாதுதீன் ஓவைசி கட்சி சார்பாக பட்டம் சின்னத்தில் போட்டியிட்ட நபீலா வக்கீல் அகமது வெற்றி பெற்றுள்ளார்   இதன் மூலம் தமிழகத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது அசாதுதீன் ஓவைசி மஜ்லிஸ் கட்சி.