மன்னிப்பு கடிதத்தை ஏன் மாஸ்டர் பிளான் என்று சொல்கிறீர்கள்? பெண் எம்.பி.யின் அனல் பேச்சு

 
ப்

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் , காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேசியபோது ஏழைகளுக்கு ஒரு இந்தியா பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா என்று பேசி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்.  தமிழகத்தில் உங்களால் ஒருநாளும் ஆள முடியாது என்று பாஜகவை மேலும் கடுமையாக பேசி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் .  ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள்,   அமெரிக்க செய்தி தொடர்பாளர் என பலரும் எதிரிவினையாற்றி வருகின்றனர்.

ம்ம்

 இந்த நிலையில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பாஜகவினருக்கு சவால் விடுத்தார்.    அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,    இன்று மாலை நான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின் போது பேசுகிறேன்.   பாஜகவினர் கற்பனை கதைகளை கட்டவிழ்க்கும் உங்களுடைய தாக்குதல் படையை தயாராக வைத்துக்கொள்ளுங்கள் .   வேண்டுமென்றால் கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள் என்று பதிவிட்டிருந்தார்.  

இந்த டுவிட்டர் பதிவு பாஜகவினரை அலறவைத்தது.    

மோடி அரசு வரலாற்றை மாற்றி எழுத நினைக்கிறது .    இந்த அரசு தங்களின் எதிர்காலத்தை நினைத்து அஞ்சுகிறது .  நிகழ்காலத்தின் மீது இந்த அரசுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.    அவர் மேலும்,   குடியரசுத் தலைவர் தனது உரையின் ஆரம்பத்தில் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி பேசினார்.  அது வெறும் உதட்டளவில் மட்டுமே பேசியதாக தெரிகிறது.

ட்ந்ந்

 அது மட்டுமல்லாது இந்தியாவின் ஆன்மாவாக விளங்கும் கண்ணியம் , பன்மைத்துவம்,  மதச்சார்பின்மை ஆகியவற்றை இந்த அரசாங்கம் மிகவும் பாதுகாப்பற்றதாக மாற்றியிருக்கிறது.    பல ஆண்டுகளாக பெருமையோடு சொல்லும் நமது வரலாறுகளை திரித்து வருகிறது.    சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரர் என்கிறீர்கள்.  இந்த அரசு ஆங்கிலேயருக்கு மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது பிரிட்டிஷ் அரசுக்கு அவர் எழுதிய மன்னிப்பு கடிதத்தை மாஸ்டர் பிளான் என்று சொல்கிறீர்கள் என்று ஆவேசமாக கேட்டார்.

மேலும்,   பாசிசத்தை கடுமையாக எதிர்த்த பகத்சிங்கையும்,    தான் உள்துறை அமைச்சரான பின்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்த வல்லபாய் படேலையும் பாஜக இன்று கையிலெடுத்து அவர்கள் கொள்கைகளை வரலாறுகளையும் மாற்றுகிறது என்றார்ஆவேசத்துடன்.