ஆவேசம், ஆத்திரம்...அடுத்த சில நிமிடங்களில் சிரித்துக்கொண்ட நேரு - ராஜா

 
ne

 பாஜகதான் எதிர்க்கட்சி போல செயல்படுகிறது என்று அக்கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசும் அளவிற்கு திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது பாஜக.   இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திலும் பாஜகவை திமுகவும்,  திமுகவை பாஜகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

 பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அக்கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார்.  இந்த அதேபோல திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அமைச்சர் கே என் நேரு பாஜகவை கடுமையாக திட்டி பிரச்சாரம் செய்தார்.  ஒரு  இடத்தில் இரண்டு பேரும் நேருக்கு நேர் சந்தித்து வணக்கம் வைத்து சிரித்து பேசியது இரு கட்சி தொண்டர்களுக்கும் ஆச்சரியமாகவும் குழப்பமாக இருந்தது.

bj

திருச்சி மாநகராட்சியில்  ஸ்ரீரங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள வார்டுகளில் பாஜக சார்பில் போட்டியிடும்  ஏழு வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்  எச்.ராஜா.   ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் முன்பாக வாகனத்தில் இருந்தபடியே எச். ராஜா பேசினார்.

 திமுக ஆட்சிக்காலத்தில் ரவுடித்தனம் செய்தார்கள் கோயில்களை இடிக்கிறார்கள் என்று அதிமுகவிற்கு மக்கள் வாக்களித்தார்கள்.   அதிமுக எப்போதுமே வாயை மூடிக்கொண்டு இருப்பதால் மீண்டும் திமுகவிற்கு வாக்கு அளித்தார்கள்.   கடந்த 55 வருடங்களாக இப்படி மாறி மாறி ஆட்சி செய்து வருகிறார்கள்.  தர்மத்தை காக்க இந்த முறை பாஜக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.   

 ஏற்கனவே நயினார் நாகேந்திரன் அதிமுகவை கடுமையாக விளாசியிருக்கும் நிலையில்,  எதிர்க்கட்சி போல செயல்படவில்லை அமைதியாக இருக்கிறது என்று விமர்சித்திருந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் மட்டும்தான் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக தனித்து போட்டியிடுகிறது.   மற்றபடி  அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பாஜக தலைமை தெரிவித்திருக்கும் நிலையில்,   அதிமுக அமைச்சர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

d

தொடர்ந்து பேசிய  எச்.ராஜா,  திமுகவை கடுமையாக தாக்கினார்.   திமுக சர்க்கார்  அவல சர்க்கார் ஆக செயல்படுகிறது . இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள்.   வெறும் இரண்டரை சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.    தூக்கி எறிய வெகுநாள் ஆகாது என்று எச்சரித்தார்.  மேலும், ஊழலும் திமுகவும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்.  அதில் இருந்து அவர்களை பிரிக்க முடியாது .  பொங்கல் பரிசு வழங்கிய 1500 கோடி ரூபாயில்  ஐநூறு கோடி ரூபாய் கொள்ளை அடித்து இருக்கிறார்கள்.  பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத காரணத்தினால் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் கொள்ளையடித்து வருகிறார்கள் என்றார்.

அதன்பின்னர் அடுத்த இடத்தில் பிரச்சாரம் செய்வதற்காக பிரச்சார வாகனம் நகர்ந்தபோது,   திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே. என். நேரு பிரச்சாரம் செய்ய பகுதிக்கு வந்தார் .அப்போது நேருவும் ராஜாவும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி நலம் விசாரித்துக் கொண்டார்கள் .  அது மட்டுமல்லாமல் பாஜக வேட்பாளரிடமும் நலம் விசாரித்து பிரச்சாரத்தை பற்றி கேட்டறிந்தார்.

 பிரச்சாரத்தில் இரண்டு பேரும் கடுமையாகத் தாக்கிப் பேசி விட்டு அடுத்த சில நிமிடங்களில் நேருக்கு நேர் சந்தித்து நலம் விசாரித்து கொண்டது இரு கட்சியினருக்கும் ஆச்சர்யமாகவும் அதே நேரத்தில் குழப்பமாகவும் இருந்தது.