அனைத்து ஆதாரங்களும் உள்ளது - ரா.பா. எப்.ஐ.ஆரை ரத்து செய்ய கூடாது - தமிழக அரசு

 
ra

ராஜேந்திரபாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதால் தன்மீதான எப்ஐஆர் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்கிற அவரது கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார் . இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  

h

 ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார் .  மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர் திடீரென்று திருச்சி மத்திய சிறையில் மாற்றி அடைக்கப்பட்டார்.  

 முன்ஜாமீன் மனு நிலுவையில் இருந்த நிலையில் அவரை கைது செய்தது ஏன்? மதுரை சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு மாற்றியது ஏன்? என்று பல்வேறு கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.   அந்த உத்தரவை அடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீனும் வழங்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.  அதில்,  மதுரை சிறையில் அடைத்தால் பார்வையாளர்கள் அதிகம் வருவார்கள் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால்தான் அவரை சிறைக்கு மாற்றினோம் என்று தெரிவித்திருக்கிறது.    மேலும்,   ராஜேந்திரபாலாஜி பண மோசடி செய்த தற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதால் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   அனைத்து  ஆதாரங்களும் இருப்பதால் ராஜேந்திர பாலாஜி தன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அந்த பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.