அழகிரியின் ஆதரவாளர் வெற்றி -திமுக அதிர்ச்சி

 
w

திமுக எதிர்க்கட்சியாக இருந்த வரையிலும் அக்கட்சிக்கு எதிராக பேசி வந்தார் மு. க. அழகிரி.   திமுகவை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.   ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அவர் தனிக்கட்சி எதுவும் தொடங்காமல் அதே நேரத்தில் திமுகவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.

 அத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அழகிரி திமுகவில் இணைய விரும்புவதாக செய்திகள் வெளிவந்தன.   ஆனால் திமுக வெற்றி பெற்று 9 மாதங்களாக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் கூட மு. க. அழகிரியும்,  ஸ்டாலினும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவேயில்லை .

ப

இந்த நிலையில் மு.க. அழகிரி ஆதரவாளர் மதுரையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.   மதுரை மாநகராட்சி தேர்தலில் அழகிரியின் ஆதரவாளர்களான முபாரக் மந்திரியின் மனைவி பானுவும்,  இசக்கிமுத்துவின் மனைவியும் சுயேச்சையாக போட்டியிட்டனர்.  

மதுரை 47வது வார்டில்  திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் மேகலாவை எதிர்த்து அழகிரி ஆதரவாளர்பானு போட்டியிட்டது  கவனம் பெற்றிருந்தது. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில் மதுரை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட மு.க. அழகிரியின் ஆதரவாளர் முபாரக் மந்திரி மனைவி பானு வெற்றி பெற்றிருக்கிறார்.   இவர் பாஜக வேட்பாளரை விட 2, 270 வாக்குகள் அதிகம் பெற்று இருக்கிறார்.

 அழகிரியின் ஆதரவாளர் வெற்றி திமுகவினரை அதிர வைத்திருக்கிறது. மு.க. அழகிரிக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியால்  அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.