அமைச்சராகிறார் நடிகை ரோஜா! ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

 
ro

ஆந்திராவில் நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நடிகைரோஜா அமைச்சராகிறார் என்ற  பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும்,  பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

 இன்று வெளியிடப்பட இருக்கும் ஆந்திர அமைச்சரவையின் புதிய அமைச்சரவை பட்டியலில் நகரி சட்டமன்ற உறுப்பினர் நடிகை ரோஜாவின் பெயரும் இடம் பெற்றிருப்பதாக தகவல் பரவியிருக்கிறது.  

ro

 ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றபோது தனது அமைச்சரவையில் 24 அமைச்சர்களை நியமித்தார்.   அப்போது அவர் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.   அதன்படி தற்போது புதிய அமைச்சரவையை அமைக்க இருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி.

 மாற்றி அமைக்கப்பட இருக்கும் இந்த அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.   புதிய அமைச்சரவையை முன்னிட்டு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக  அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

ro

 புதிய அமைச்சர்கள் பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.   அந்த புதிய அமைச்சரவை பட்டியலில் நகரி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் நடிகையுமான ரோஜா பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.   இதை முன்னிட்டு நகரியில் இருக்கும் நடிகை ரோஜாவின் வீட்டின் முன்பாக ஒய்.எஸ்.ஆர். கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இரண்டாவது முறையாக ரோஜா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்