அதிரடி! சசிகலாவை அதிமுகவில் சேர்க்க ஓபிஎஸ் முடிவு

 
t

அதிமுகவில் சசிகலாவையும்,  டிடிவி தினகரனையும் எந்தவித நிபந்தனையும் இன்றி சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற அறிவுறுத்தி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

 கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது.  இதற்கு காரணம் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து அமமுக என்று பிரிந்திருப்பதால் வாக்குகள் சிதறுகின்றன என்று அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கருத்து கூறி வந்தனர். 

ooop

 சசிகலாவும்,  டிடிவி தினகரனும் அதிமுகவுடன் இணைந்தால் இந்த வாக்குகள் ஒன்றாக ஆகிவிடும் என்று பல்வேறு தரப்பினரும் சொல்லி வந்த நிலையில்,  இதையே சசிகலாவும் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது சசிகலாவையும் , டிடிவி தினகரனையும் அதிமுகவில் சேர்க்க,  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான நடந்த ஆலோசனை கூட்டத்தில்  முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்,  இதையே வரும் ஐந்தாம் தேதி என்று தேனி மாவட்ட அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  த்லைமைக்கு அனுப்ப அறிவுறுத்தி இருக்கிறாராம் ஓபிஎஸ்.

 தேனி மாவட்டத்தில் பெரியகுளம் லட்சுமிபுரத்தில் இருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில்  ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சையது கான்,  முன்னாள் எம்பி பார்த்திபன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சசிகலாவையும், தினகரனையும் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வது குறித்து நடந்த கூட்டத்தில், இருவரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து  இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்ப  பன்னீர்செல்வம் அறிவுறுத்தி இருக்கிறாராம்.

ட்ட்ட்

 இதையடுத்து அதிமுகவில் சசிகலாவையும்,  டிடிவி தினகரனையும் சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று வரும் 5ம் தேதி அன்று தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்ப உள்ளார்களாம்.  அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இதுபோல தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பும் முடிவில் உள்ளார்களாம்.