எங்களை கோர்த்து விடாதீங்க.. எஸ்கேப் ஆன வளர்மதி

 
v

 இதுபோன்ற விஷயங்களில் எங்களை கோர்த்து விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார் முன்னாள் அமைச்சர் வளர்மதி. 

 சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது .  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி , முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கேக் ஊட்ட,  அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கேக் ஊட்டினார்.  பதிலுக்கு அவர்கள் இருவரும் இவர்களுக்கு ஊட்டினர்.  

vv

 நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரித்து மகிழ்ந்தனர் . இதைத்தொடர்ந்து  முன்னாள் அமைச்சரும் திமுகவின் மகளிரணி செயலாளருமான வளர்மதி செய்தியாளர்களிடம் பேசினார். 

 ஜெயலலிதா காலம் முதல் மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடுகிறோம்.   மகளிரணியினர் மாவட்ட ஒன்றிய அளவில் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.  மகளிர் அணி அதிகம் உள்ள கட்சி அதிமுக தான்.   கட்சிக்காக சிறைச்சாலை சென்று முதல் குரல் கொடுத்ததும் மகளிரணி தான் என்ற வளர்மதியிடம், 

sa

 அதிமுகவில் சசிகலா இணைய இருப்பது குறித்த கேள்விக்கு,   அதிமுகவில்  ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும் தொண்டர்கள் ஏற்றுள்ளார்கள்.  சசிகலா தொடர்பாக கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.   அதிமுகவின் இருபெரும் தலைவர்களூக்குத் தான் முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது.  சசிகலா உட்பட அனைவர் தொடர்பாகவும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு  நடப்போம் என்றார்.

 சசிகலா இணைப்பை நீங்கள் ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு ,  ஊடகங்கள் எதையாவது கேட்டு எங்களை கோர்த்து விடாதீர்கள்.  இது போன்ற விஷயங்களில் எங்களை லிங்க் செய்துவிட்டு போய் விடாதீர்கள்.   தலைமையின் முடிவுக்கு எப்போதும் கட்டுப்படுவோம் அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார். அப்போதும்,   சசிகலாவுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் உண்டா? என்று கேட்க,   பதிலளிக்காமல் சிரித்தார் வளர்மதி.