ஒரு ஓட்டு கூட வாங்காத அதிமுக வேட்பாளர்

 
ந்க்

நகர்ப்புற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சுவாரசியமான அறிவிப்புகள்  முடிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன.  ஒரு ஓட்டில் வெற்றி பெற்ற வேட்பாளர்,  ஒரு ஓட்டு கூட வாங்காத வேட்பாளர்,  ஓரே ஓட்டு விகிதத்தில் வாங்கிய வேட்பாளர்கள்  என்று அரசியல் முடிவுகள் சுவாரசியமாக இருந்து வருகின்றன.

 பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரே ஒரு ஓட்டு பெற்றிருக்கும் நிலையில்,   இன்னொரு பாஜக வேட்பாளர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.   அதே இன்னொரு பாஜக  வேட்பாளர் திமுக பிரமுகர் பெற்ற வாக்குகளை பெற்றிருந்ததால் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ய்ய்

 புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி 7 வது வார்டில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.  அதில் 179 வாக்குகளைப் பெற்று சுயேட்சை வேட்பாளர் பிரித்திவிராஜ் வெற்றி பெற்றுள்ளார்.  திமுக வேட்பாளர்  149 வாக்குகளை பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார்.   இன்னொரு சுயேட்சை வேட்பாளர் அப்துல்கரீம் 135 வாக்குகள் பெற்றுள்ளார்.   மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர் .

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட பீர்முகமது நான்கு வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார் .    அதிமுக வேட்பாளர் முகமது இப்ராம்சா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட தர்மராஜ் ஆகியோர் ஒரு வாக்கு கூட பெறவில்லை.

 அதிமுக வேட்பாளர் முகமது இப்ராம்சாவின் அண்ணன் அதிமுகவில் கரம்பக்குடி நகரச் செயலாளராக உள்ளார்.   கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது இருவருமே வாக்களித்திருந்தனர்.   அப்படி இருந்தும் ஒரு ஓட்டு கூட பதிவு ஆகாது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  

 அதிமுக சார்பில்  முகம்மது இப்ராம்சா களமிறங்கியிருந்தாலும் அவருக்கு எதிராக அதிமுகவை சேர்ந்தவர்கள் சுயேட்சையாக நின்றதால் முகம்மது இப்ராம்சாவுக்கு வாக்குகள் வரவில்லை என்று கூறப்படுகிறது.